×

கண்ணாடி மேற்கூரையுடன் புதிய ஹேரியர் XT+ கார் – டாடா மோட்டார்ஸ் அறிமுகம்

கார் விற்பனையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ், பிரபல எஸ்யுவி ரக காரான ஹேரியரில் எக்ஸ்டி பிளஸ் என்ற புதிய வகை காரை வெளியிட்டுள்ளது டூயல் ஏர் பேக், ஆர்17 அலாய் சக்கரங்கள், 7 இன்ச் தொடுதிரையுடன் கூடிய பொழுதுபோக்கு சிஸ்டம் மற்றும் பின்புறம் பார்க்கிங் செய்வதற்கான கேமரா என பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது. முக்கிய சிறப்பம்சமாக கண்ணாடி மேற்கூரையுடன் வெளிவந்துள்ள இந்த கார் 16 லட்சத்து 99 ஆயிரம் என்ற விலைக்கு ( டெல்லி
 

கார் விற்பனையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ், பிரபல எஸ்யுவி ரக காரான ஹேரியரில் எக்ஸ்டி பிளஸ் என்ற புதிய வகை காரை வெளியிட்டுள்ளது

டூயல் ஏர் பேக், ஆர்17 அலாய் சக்கரங்கள், 7 இன்ச் தொடுதிரையுடன் கூடிய பொழுதுபோக்கு சிஸ்டம் மற்றும் பின்புறம் பார்க்கிங் செய்வதற்கான கேமரா என பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

முக்கிய சிறப்பம்சமாக கண்ணாடி மேற்கூரையுடன் வெளிவந்துள்ள இந்த கார் 16 லட்சத்து 99 ஆயிரம் என்ற விலைக்கு ( டெல்லி ஷோரூம் விலை) அறிமுகமாகி உள்ளது.

கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹேரியர் பிஎஸ்6 வகை காருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அதே வரிசையில் புதிய வகை காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.முத்துக்குமார்