×

”பழைய ஆண்டிராய்ட் டிவிக்களுக்கு 9.0 அப்டேட் – அளிக்குது சோனி”

பழைய சோனி ஆண்டிராய்ட் டிவி வைத்துள்ளவர்களுக்கு ஆண்டிராய்ட் 9.0 அப்டேட் அளிக்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதன்படி கடந்த 2016ம் ஆண்டில் வாங்கப்பட்ட சோனி நிறுவனத்தின் ஆண்டிராய்ட் டிவிக்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்படுவதாக தெரிகிறது. இந்த அப்டேட் உடன் 100-120 ஹெர்ட்ஸ் வீடியோ பிளேபேக் வசதியும் சேர்த்து அந்த டிவிகளில் அப்டேட் செய்யப்படுவதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தம் 30 டிவி மாடல்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள சோனி நிறுவனம், தொடக்கக்கட்டமாக லத்தீன் அமெரிக்காவிலும், பின்னர்
 

பழைய சோனி ஆண்டிராய்ட் டிவி வைத்துள்ளவர்களுக்கு ஆண்டிராய்ட் 9.0 அப்டேட் அளிக்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது.

இதன்படி கடந்த 2016ம் ஆண்டில் வாங்கப்பட்ட சோனி நிறுவனத்தின் ஆண்டிராய்ட் டிவிக்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்படுவதாக தெரிகிறது. இந்த அப்டேட் உடன் 100-120 ஹெர்ட்ஸ் வீடியோ பிளேபேக் வசதியும் சேர்த்து அந்த டிவிகளில் அப்டேட் செய்யப்படுவதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தம் 30 டிவி மாடல்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள சோனி நிறுவனம், தொடக்கக்கட்டமாக லத்தீன் அமெரிக்காவிலும், பின்னர் படிப்படியாக உலகின் மற்ற பகுதிகளிலும் இந்த அப்டேட் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த அப்டேட்டை பெறுவதற்கு வசதியாக சோனி ஆண்டிராய்ட் டிவி செட்டிங்ஸில், ”ஆட்டோமேட்டிக் சாப்ட்வேர் டவுன்லோடு” என்ற ஆப்ஷனை ஆன் செய்து வைத்தால் அப்டேட் சிறப்பாக நடக்கும் என்றும் சோனி நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இந்த அப்டேட் மூலம் ஒட்டுமொத்த ஆண்டிராய்ட் செட்டிங்ஸ் புதிய மாற்றம் பெறும் என தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்