×

16 ஜிபி ரேம் கொண்ட iQoo 11 5G ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கியது

 

இந்தியாவில் iQoo 11 5G ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. 

iQoo சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2019ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் விவோ ஆகும். இந்தியாவில் தற்போது iQoo  தனக்கென்று தனி அடையாளத்தை பிடித்துள்ளது.. iQoo செல்போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இதேபோல் இந்த நிறுவனம் ஏராளமான வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளது. iQoo செல்போன்களில் இதுவரை ஏராளமான மாடல்கள் வந்துள்ள நிலையில், iQoo 11 5G ஸ்மார்ட்போன் இன்று ஆறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது.  iQoo 11 5G ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் விலை ரூ.64 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

iQoo 11 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :

 6.78 இன்ச் QHD+ சாம்சங் E6 AMOLED வளைந்த ஸ்கிரீன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 144Hz ரிப்ரெஷ் ரேட், LTPO 4.0 தொழில்நுட்பம் மற்றும் 300Hz டச் சாம்ப்லிங் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐகூ உருவாக்கிய LTPO தொழில்நுட்பம் ஒரு ஸ்கிரீனில் ஒரே சமயத்தில் 60Hz மற்றும் 120Hz என இருவித ரிப்ரெஷ் ரேட்களை செயல்படுத்தும் என ஐகூ தெரிவித்து இருக்கிறது. இது போன்ற டிஸ்ப்ளே அம்சம் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டு அறிமுகமாகி இருக்கும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஐகூ 11 ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் ஏவியேஷன் கிரேடு அலுமினியம் ஃபிரேம் உள்ளது. இத்துடன் 8 ஜிபி மற்றும் 16 ஜிபி LPDDR5X ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13, டூயல் சிம் ஸ்லாட்,  50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா 13MP, 2x டெலிபோட்டோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3 யுஎஸ்பி டைப் சி உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.