×

”3 புதிய ஸ்மார்ட்போன்கள்” – ரியல்மி அறிமுகம் !

ரியல்மி நிறுவனம், நர்சோ என்ற மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. நர்சோ புரோ, நர்சோ 20, நர்சோ 20ஏ, ஆகிய 3 ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில், நர்சோ புரோ போன், 6.5 இன்ச் ஃபுல் எச்டி திரை, மீடியா டெக் ஹீலியோ ஜி95 பிராசசர், 4500 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட்ஸ் சூப்பர் டார்ட் சார்ஜருடன் வருகிறது. இந்த பாஸ்ட் சார்ஜரில் சார்ஜ் செய்தால் 38 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்
 

ரியல்மி நிறுவனம், நர்சோ என்ற மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தி உள்ளது.

நர்சோ புரோ, நர்சோ 20, நர்சோ 20ஏ, ஆகிய 3 ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில், நர்சோ புரோ போன், 6.5 இன்ச் ஃபுல் எச்டி திரை, மீடியா டெக் ஹீலியோ ஜி95 பிராசசர், 4500 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட்ஸ் சூப்பர் டார்ட் சார்ஜருடன் வருகிறது. இந்த பாஸ்ட் சார்ஜரில் சார்ஜ் செய்தால் 38 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம் என ரியல்மி தெரிவித்துள்ளது. மேலும் இந்த நர்சோ புரோ போனின் பின்புறத்தில் 48 மெகா பிக்சல் மற்றும் 8 மெகா பிக்சல் என இரண்டு கேமராக்களும், முன்புறத்தில் 16 மெகா பிக்சல் செல்பி கேமராவும் உள்ளது. இந்த புதிய போன், வரும் 25ம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் இதன் விலை 14,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

இதேப்போல 6.5 இன்ச் திரை கொண்ட புதிய நர்சோ 20 போன், 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் சார்ஜருடன் வெளிவருகிறது. டைப் சி போர்ட் உடன் வரும் இந்த போனில் பின்புறம் 48 எம்பி மற்றும் 8 எம்பி கேமராவும், முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமராவும் உள்ளது. இதன் விலை 10 ஆயிரத்து 499 ரூபாயில் தொடங்குகிறது. இது வரும் 28ம் தேதி முதல் விற்பனைக்கு கடைகளில் கிடைக்கும்.

மற்றுமொரு போனான நர்சோ 20ஏ, 6.5 இன்ச் திரை, ஸ்நாப்டிராகன் 665 பிராசசர், 5000 எம்ஏஎச் பேட்டரி, பின்புறத்தில் 12 எம்பி கேமா உள்ளிட்ட மூன்று கேமரா அமைப்புடன், முன்புறம் 8எம்பி செல்பி கேமராவுடன் வெளிவருகிறது. இதன் விலை, 8,499 ரூபாயில் தொடங்குகிறது என்றும் இந்த புதிய போன் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஆன்லைன் தளத்தில் வரும் 30ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-எஸ். முத்துக்குமார்