×

பிளேஸ்டேஷன் 5 வடிவமைப்பு வெளியானது – பிளேஸ்டேஷன் 5 டிஜிட்டல் பதிப்பு அறிவிப்பு

வீடியோகேம் பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பிளேஸ்டேஷன் 5 கன்சோல் வடிவமைப்பு பற்றி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பிஎஸ் 5 வீடியோ கேம் கன்சோல் எப்படி இருக்கும் என்று புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சோனி நிறுவனம் அடுத்த தலைமுறை கேம் கன்சோலை பிளேஸ்டேஷன் 5 வெளியிட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கன்சோல் சாதனம் ‘எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ்’ கன்சோல் போலவே செங்குத்தாக நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சோனி நிறுவனம் பிஎஸ் 5 டிஜிட்டல் பதிப்பு குறித்தும்
 

வீடியோகேம் பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பிளேஸ்டேஷன் 5 கன்சோல் வடிவமைப்பு பற்றி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பிஎஸ் 5 வீடியோ கேம் கன்சோல் எப்படி இருக்கும் என்று புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சோனி நிறுவனம் அடுத்த தலைமுறை கேம் கன்சோலை பிளேஸ்டேஷன் 5  வெளியிட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கன்சோல் சாதனம் ‘எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ்’ கன்சோல் போலவே செங்குத்தாக நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சோனி நிறுவனம் பிஎஸ் 5 டிஜிட்டல் பதிப்பு குறித்தும் அறிவித்துள்ளது.

4K ப்ளூ-ரே டிஸ்க் டிரைவ் இல்லாமல் பிஎஸ் 5 டிஜிட்டல் பதிப்பு வெளியாக உள்ளது. இந்த சாதனத்தின் விலை மற்றும் மெமரி பற்றி எந்த தகவலும் இப்போதைக்கு வெளியிடப்படவில்லை. பிஎஸ் 5 சாதனம் பார்ப்பதற்கு மிகவும் மெல்லியதாகவும், ஆடம்பரமாகவும் இருக்கிறது. இந்த வருடத்திற்குள் பிஎஸ் 5 வீடியோ கேம் கன்சோல் சாதனம் விற்பனைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.