×

ஜப்பான் நூலகங்களில் புதுமையான கருவி – எதற்கு தெரியுமா ?

நூலகங்கள் அறிவின் வாசல்களாக இருப்பதில் சந்தேகமில்லை. ஆனால், கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் நோய்களை பரப்பும் ஆபத்துகளும் உள்ளதாக சுகாதார மையம் எச்சரிக்கை செய்துள்ளது . பொதுஇடங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினாலும், அறிவின் வாசல்களை திறக்கும் நூலகங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதை பல நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சுகாதார நடவடிக்கைகளுடன் நூலகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டன. ஜப்பானில், நூலகங்கள மூடவில்லை என்றாலும், சுகாதார நடவடிக்கைகளுக்காக புதுமையான முறைகளை கடைபிடித்துள்ளது. வாசகர்களுக்கு பல சுகாதார கட்டுப்பாடுகள் இருந்தாலும், நூல்களை சுத்தம் செய்வதற்காக, ஒவ்வொரு
 

நூலகங்கள் அறிவின் வாசல்களாக இருப்பதில் சந்தேகமில்லை. ஆனால், கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் நோய்களை பரப்பும் ஆபத்துகளும் உள்ளதாக சுகாதார மையம் எச்சரிக்கை செய்துள்ளது . பொதுஇடங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினாலும், அறிவின் வாசல்களை திறக்கும் நூலகங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதை பல நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சுகாதார நடவடிக்கைகளுடன் நூலகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டன. ஜப்பானில், நூலகங்கள மூடவில்லை என்றாலும், சுகாதார நடவடிக்கைகளுக்காக புதுமையான முறைகளை கடைபிடித்துள்ளது. வாசகர்களுக்கு பல சுகாதார கட்டுப்பாடுகள் இருந்தாலும், நூல்களை சுத்தம் செய்வதற்காக, ஒவ்வொரு நூலகத்திலும் அல்ட்ரா வயலட் மூலம் சுத்தம் செய்ய நவீன கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வாசகர்கள் படித்துவிட்டு வைக்கும் புத்தகங்களை, நூலகர்கள் அந்த இயந்திரத்துக்குள் வைத்து உடனடியாக சுத்தம் செய்கின்றனர். கிருமிகள், தூசிகளை அந்த இயந்திரம் சுத்தம் செய்து விடுகிறது. 2018 ஆம் ஆம் ஆண்டிலிருந்து இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து நூலகங்களிலும் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாசகர்கள் புத்தகத்தை எடுக்கும் பொழுதும், படித்துவிட்டு புத்தகத்தை திரும்ப வைக்கும்போழுதும் இந்த இயந்திரத்துக்குள் வைத்து சுத்தம் செய்யப்படுகிறது. எனினும் இந்த நடைமுறை கட்டாயம் அல்ல என்றும், பார்வையாளர்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, புத்தகத்தை இந்த இயந்திரத்துக்குள் வைத்து சுத்தம் செய்வதை வாசகர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கான புத்தகத்தை இந்த இயந்திரத்துக்குள் வைத்து சுத்தம் செய்யப்படுவதை மக்கள் விரும்புகின்றனர்.

கண்ணாடி திரையிட்ட இந்த இயந்திரத்தில் நூல்கள் அல்ட்ரா வயலெட் மூலம் சுத்தம் செய்யப்படுவதை பார்வையாளர்கள் நேரிலேயே பார்க்க முடியும். இது தொடர்பாக பெற்றோர்கள் கூறுகையில், இந்த நடைமுறை எவ்வளவு தூரம் பாதுகாப்பானது என்பது தெரியாது, ஆனால் வழக்கமாக எடுத்து படிப்பதை விட சிறந்த பயனைக் கொடுக்கும் என்று நம்பலாம் எனக் குறிப்பிடுகின்றனர். நூலகத்துக்கு வரும் குழந்தைகள் புத்தகங்கள் சுத்தம் செய்யப்படுவதை கண்களால் பார்த்து உற்சாகம் அடைகின்றனர். அதனால் மிகவும் ஆர்வமாக புத்தகத்தை எடுத்து படிக்கின்றனர் என்றும் பெற்றோர் கூறுகின்றனர். குறிப்பாக நூலகத்தில் புத்தகங்கள் எடுப்பதற்கு முன்னும், படித்து விட்டு கொடுப்பதற்கு முன்னும் அந்த இயந்திரத்துக்குள் வைத்து கொடுப்பதன் மூலம் தொற்று பரவலை குறைக்க முடியும் என்பதால் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

வயதானவர்களும் இந்த நடைமுறையை விரும்புகின்றனர் என்றும் நூலகர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்றினை குறைக்கும் நடவடிக்கைகளில் ஜப்பான் மிக கவனமாக இருந்து வருகிறது. உலக அளவில் ஒப்பிடும் பொழுது , ஜப்பானில்தான் கொரோனா தொற்று எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் உள்ளது. இறப்பு எண்ணிக்கையும் ஜப்பானில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தொற்று எண்ணிக்கை இதுவரை 1.67 லட்சமாகவும், இறப்பு எண்ணிக்கை 2,450 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.