×

மோட்டோ G73 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் -  விற்பனை எப்போது தெரியுமா?

 

மோட்டோ G73 5G ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் விற்பனை தேதி மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. 

அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட நிறுவனமான மோட்டோரோலா, எலக்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனம் மோட்டோ என்ற பெயரில் செல்போன்களை விற்பனை செய்து வருகிறது. உலக அளவில் செல்போன்களுக்கு பெரிய சந்தையை கொண்டுள்ள மோட்டோ இந்தியாவிலும் ஏராளமான வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது. இதுவரை ஏராளமான மாடல்கள் வந்துள்ள நிலையில், அந்நிறுவனம் புதிய மோட்டோ G73 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை மார்ச் 16 ஆம் தேதி ஃப்ளிப்கார்ட் தளத்தில் தொடங்குகிறது.

மோட்டோ G73 5G சிறப்பம்சங்கள் :

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 930 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டிமென்சிட்டி 930 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை மோட்டோ G73 5ஜி பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ G73 5ஜி ஆண்ட்ராய்டு 14+ அப்டேட், மூன்று ஆண்டுகள் ஆண்ட்ராய்டு செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆட்டோஃபோக்கஸ் கேமரா, 16MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோ G73 5ஜி மாடலில் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 30 வாட் டர்போசார்ஜிங் வசதி, அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது. மோட்டோ G73 5ஜி ஸ்மா்ட்போன் மிட்நைட் புளூ மற்றும் லுசெண்ட் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.