×

”அமேசான் ஃபயர் ஸ்டிக்கில் லைவ் டிவி வசதி அறிமுகம்”

ஃபயர் ஸ்டிக் சாதனத்தில் லைவ் டிவி பார்க்கும் வசதியை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, அனைத்து ஸ்டீரமிங் செயலிகளிலும் கிடைக்கும் அனைத்து லைவ் டிவிக்களும் ஒரே இடத்தில் காண கிடைக்கும் வகையில் லைவ் டிவி வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த டிவி சேனலில் என்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆகின்றன என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் நேவிகேஷன் அம்சமும் உள்ளதாக தெரிகிறது. இதனால் ஸ்டீரிமிங் ஆப்ஸ் மூலமாக லைவ் டிவி பார்ப்பது மிக எளிது என்பதுடன், என்ன சேனலில்
 

ஃபயர் ஸ்டிக் சாதனத்தில் லைவ் டிவி பார்க்கும் வசதியை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, அனைத்து ஸ்டீரமிங் செயலிகளிலும் கிடைக்கும் அனைத்து லைவ் டிவிக்களும் ஒரே இடத்தில் காண கிடைக்கும் வகையில் லைவ் டிவி வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த டிவி சேனலில் என்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆகின்றன என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் நேவிகேஷன் அம்சமும் உள்ளதாக தெரிகிறது. இதனால் ஸ்டீரிமிங் ஆப்ஸ் மூலமாக லைவ் டிவி பார்ப்பது மிக எளிது என்பதுடன், என்ன சேனலில் என்ன நிகழ்ச்சி என ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள முடியும். இதன்படி, தற்போது ஃபயர் ஸ்டிக் மற்றும் பயர் டிவி எடிஷன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த லைவ் டிவி வசதியை பெறலாம் என அமேசான் தெரிவித்துள்ளது.

இதற்காக சோனி லைவ், வூட் டிஸ்கவரி பிளஸ், நெக்ஸ்ட்ஜி டிவி உள்ளிட்ட நிறுவனங்களுடன் அமேசான் நிறுவனம் உடன்பாடு செய்துகொண்டுள்ளது. இதன்படி, கலர்ஸ் எச்டி, சோனி பிபிசி எர்த் எச்டி, ஜீ டிவி, ஜீ சினிமா, ஜீ நியூஸ், எம்டிவி பீட்ஸ் எச்டி, டிடி நேஷனல், உள்ளிட்ட ஏராளமான டிவி சேனல்களை கண்டுகளிக்க முடியும் என தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்