×

“இன்னும் ஒரு வருசத்துல டோல்கேட்டே இருக்காது… வேற மாறி துட்டு கலெக்ட் பண்ணுவோம்”

இன்னும் ஒரு வருடத்தில் இந்தியாவில் சுங்கச்சாவடிகள் இல்லாமல் செய்வோம் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய நிதின் கட்கரி, “ஒரு வருடங்களுக்குள் சுங்கச்சாவடி இல்லாத நாடாக இந்தியா மாற்றப்படும் என்பதற்கு நான் உறுதியளிக்கிறேன். அதற்காக சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என்று பொருள் இல்லை. ஜிபிஎஸ் (GPS) டிராக்கிங் முறையால் கட்டணம் வசூலிக்கப்படும். இப்போது வரும் வாகனங்களில் ஜிபிஎஸ் டிராக்கிங் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.
 

இன்னும் ஒரு வருடத்தில் இந்தியாவில் சுங்கச்சாவடிகள் இல்லாமல் செய்வோம் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய நிதின் கட்கரி, “ஒரு வருடங்களுக்குள் சுங்கச்சாவடி இல்லாத நாடாக இந்தியா மாற்றப்படும் என்பதற்கு நான் உறுதியளிக்கிறேன். அதற்காக சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என்று பொருள் இல்லை. ஜிபிஎஸ் (GPS) டிராக்கிங் முறையால் கட்டணம் வசூலிக்கப்படும்.

இப்போது வரும் வாகனங்களில் ஜிபிஎஸ் டிராக்கிங் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. பழைய வாகனங்களில் அந்த வசதி இல்லாவிட்டாலும் ஜிபிஎஸ் பொருத்துவதற்கு திட்டம் இருக்கிறது. பாஸ்டேக் முறையால் 34 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு வருகிறது. ஜிபிஎஸ் முறை வந்தால் கூடுதலாக 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் அரசுக்குக் கிடைக்கும். பாஸ்டேக் நடைமுறையை 93 சதவிகிதம் பேர் பின்பற்றுகின்றனர்.

7 சதவிகிதம் பேர் பாஸ்டேக் முறையைப் பின்பற்றாமல் அபராதத்துடன் சுங்க கட்டணம் செலுத்திவருகின்றனர். அவர்களும் பாஸ்டேக் எடுக்க கட்டாயம் எடுக்க வேண்டும். பாஸ்டேக் எடுக்கவில்லை என்றால் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு, சுங்க திருட்டு ஆகிய வழக்குகளில் சிக்குவார்கள் என்பதையும் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்” என்று பேசி முடித்தார்.

ஜிபிஎஸ் கலெக்சன் எப்படி செயல்படும்?

இப்போது இருக்கும் பாஸ்டேக் முறையில் காரில் ஒட்டப்பட்டிருக்கும் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கிலிருந்து கட்டணம் எடுத்துக்கொள்ளப்படும். கிட்டத்தட்ட இதே நடைமுறையில் தான் ஜிபிஎஸ் கலெக்சனும் பின்பற்றப்படும். இது புதிய முறையல்ல. ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் பின்பற்றப்பட்டு வரும் பழைய முறை தான்.


வாகனங்களில் டிராக்கிங் செய்யும் கருவிகள் பொருத்தப்படும் பட்சத்தில், அந்த வாகனம் நெடுஞ்சாலை வழியே சென்றால் தானாகவே கட்டணம் உங்களது வங்கியிலிருந்து வசூலிக்கப்படும். இம்முறை மூலம் சுங்கச்சாவடிகள் ஒழிக்கப்ப்பட்டு போக்குவரத்து நெரிசல் பெரிதளவு குறையும். அதேபோல அரசுக்கும் முறையாக வருவாய் வந்துசேரும். இந்த நடைமுறை பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாக அமைந்திருக்கிறது.