×

லேசர் போர்க் கருவிகளை உருவாக்கும் இந்தியா – மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் முயற்சி

ஸ்டார்வார்ஸ் திரைப்படங்களில் பயன்படுத்தும் கருவிகளைப் போல, போர் ஆயுதங்களை தயாரிக்க மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில், எதிர்காலத்தில் சக்திவாய்ந்த மின் கருவிகள் மற்றும் லேசர் கருவிகள், மைக்ரோவேவ் அலைகளைக் கொண்ட கருவிகளை பயன்படுத்தும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. உள்நாட்டு தொழில் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில், 100 கிலோவாட் மின் சக்தி கொண்ட கருவிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால இலக்குகளில் இந்த
 

ஸ்டார்வார்ஸ் திரைப்படங்களில் பயன்படுத்தும் கருவிகளைப் போல, போர் ஆயுதங்களை தயாரிக்க மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில், எதிர்காலத்தில் சக்திவாய்ந்த மின் கருவிகள் மற்றும் லேசர் கருவிகள், மைக்ரோவேவ் அலைகளைக் கொண்ட கருவிகளை பயன்படுத்தும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

உள்நாட்டு தொழில் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில், 100 கிலோவாட் மின் சக்தி கொண்ட கருவிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால இலக்குகளில் இந்த கருவிகளை உருவாக்க முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தற்போது 2 லேசர் கதிர்வீச்சு டிரோன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 10 கிலோ வாட் லேசர் சக்தி கொண்ட ட்ரோன்கள் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவிலான வான்வெளி

சக்தி கொண்டதாக இருக்கும். இந்த கருவியை உருவாக்கும்பட்சத்தில், உள்நாட்டு பாதுகாப்பு துறை செயல்பாடுகளுக்கு கொண்டுவரப்படும்.
ஏற்கெனவே இது போன்ற கருவிகளை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா,

இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் சோதனை முயற்சிகளில் உள்ள நிலையில், இந்தியாவும் லேசர் கருவிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்க உள்ளது. தற்போது மருத்துவத் துறையில் லேசர் பயன்பாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-அ. ஷாலினி