×

லொகேஷன் ட்ராக்கிங் வைத்து நம் ஜாதகத்தையே சொல்லலாமா? என்னடா கொடுமை இது!

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி. இன்றைய காலத்தில் பலரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். அதை பயன்படுத்துவதன் மூலம் பலரின் வாழ்க்கையும், பலர் செய்யும் வேலைகளையும் மிகவும் எளிமையாக்க முடிகிறது. இதற்கு ஏற்றவாறு பல தொழில்நுட்பங்களை கொண்டது இப்போதுள்ள ஸ்மார்ட்போன்கள். அதில் மிகவும் முக்கியமானது லொகேஷன் ட்ராக்கிங். இதன் மூலம் பயனர் எங்கு சென்றுள்ளார்? அவர் எங்கு இருக்கிறார்? என்பதை துல்லியமாக அறிய முடியும். இந்த தொழில்நுட்பத்தில் பல ஆபத்துகளும் உள்ளன.
 

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி. இன்றைய காலத்தில் பலரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். அதை பயன்படுத்துவதன் மூலம் பலரின் வாழ்க்கையும், பலர் செய்யும் வேலைகளையும் மிகவும் எளிமையாக்க முடிகிறது. இதற்கு ஏற்றவாறு பல தொழில்நுட்பங்களை கொண்டது இப்போதுள்ள ஸ்மார்ட்போன்கள். அதில் மிகவும் முக்கியமானது லொகேஷன் ட்ராக்கிங். இதன் மூலம் பயனர் எங்கு சென்றுள்ளார்? அவர் எங்கு இருக்கிறார்? என்பதை துல்லியமாக அறிய முடியும்.

இந்த தொழில்நுட்பத்தில் பல ஆபத்துகளும் உள்ளன. அதாவது இந்த தொழில்நுட்பத்தை வைத்து பல விஷயங்கள் ட்ராக் செய்ய முடியுமாம். ஸ்மார்ட் போன் வாங்கிய உடன் படித்து பார்க்காமல் ப்ரைவசி பாலிசி அக்ரிமெண்ட்க்கு ஓகே கொடுத்து விடுகிறோம். ஆனால் அதன் மூலம் பயனாளரின் நிறைய தகவல்கள் கண்காணிக்கவும், திருடவும்படுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இத்தாலியின் போலோக்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த பெஞ்சமின் பரோன் ஆகியோர் நடத்திய ஆய்வில், லொகேஷன் ட்ராக்கிங் மூலம் பயனாளரின் லொகேஷன் மட்டுமன்றி அவரின் வாழ்க்கை முறை ,அவரின் சுற்றுச்சூழல், அவரின் தனிப்பட்ட விஷயங்களும் டிராக் செய்யப்படுவது அம்பலமாகியுள்ளது.

இதுவரை லொகேஷன் ட்ராக்கிங் ஸ்மார்ட்போன் இன்டர்நெட் மூலம் 2 லட்சம் லொகேஷன் மற்றும் 2500 பயனர்களின் இடங்கள், தனிப்பட்ட தகவல்களை ட்ராக் செய்துள்ளது. இதற்கும் மேலாக அவர்களின் உடல் நலம், பொருளாதார நிலைமை மற்றும் அவர்களின் மதம் உள்ளிட்ட விவரங்களையும் லொகேஷன் ட்ராக்கிங் மூலம் ட்ராக் செய்துள்ளது என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்.