×

இலவசமாய் ஒரு தமிழ் – ஆங்கில அகராதி – 4.25 சொற்களோடு

ஒரு மொழியின் வளர்ச்சி என்பது மாறிவரும் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் ஆற்றம் அதனுள் இருக்க வேண்டும். அப்படியான சிறப்புமிக்க மொழியே தமிழ். இணையத்தில் அதை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் பலவித மாற்றங்கள் செய்யபட்டாலும் அதன் அழகும் செறிவும் நேர்த்தியும் துளியும் குறையாமல் இருக்கிறது. தமிழ்க் கணினி தொடர்பான ஆராய்ச்சிகளைக் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்திவரும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘சொல் அகராதி’ (chol agaraadhi) எனும் ஆண்டிராய்ட் ஆப்பிள் கருவிகளுக்கான குறுஞ்செயலியை இன்று வெளியிடுகிறது.
 

ஒரு மொழியின் வளர்ச்சி என்பது மாறிவரும் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் ஆற்றம் அதனுள் இருக்க வேண்டும். அப்படியான சிறப்புமிக்க மொழியே தமிழ். இணையத்தில் அதை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் பலவித மாற்றங்கள் செய்யபட்டாலும் அதன் அழகும் செறிவும் நேர்த்தியும் துளியும் குறையாமல் இருக்கிறது.

தமிழ்க் கணினி தொடர்பான ஆராய்ச்சிகளைக் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்திவரும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘சொல் அகராதி’ (chol agaraadhi) எனும் ஆண்டிராய்ட் ஆப்பிள் கருவிகளுக்கான குறுஞ்செயலியை இன்று வெளியிடுகிறது.

சங்ககால இலக்கியச் சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள், நிகழ்காலக் கலைச்சொற்கள் என்று 4.25 இலட்சம் சொற்களைச் சேகரித்து உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறுஞ்செயலி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொற்களைத் தேடும் வசதியோடு வெளியிடப்படுகிறது.

தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல், சொல்லுக்கான பொருள் விளக்கம், எளிய முறையில் பயன்படுத்தும் எடுத்துக்காட்டு, அச்சொல்லுக்கு இணையான பிற சொற்கள், தொடர்புடைய சொற்கள், உயர் பயன்பாட்டுச் சொற்களுக்கான ஒலி மற்றும் படங்கள், பதினாறு இலக்க எண்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலச் சொல் வடிவம் என்று பல்வேறு உள்ளடக்கங்களோடு இந்த அகராதி வெளியிடப்படுகிறது. இது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.