×

ஸ்மார்ட்போன்களுக்கு 80%, டிவிகளுக்கு 75% தள்ளுபடி- ஃபிளிப்கார்ட்டின் Big Saving Days Sale!

இந்தியாவின் பிரபல இ-காமர்ஸ் நிறுவனம் ஃபிளிப்கார்ட். அமேசானுக்கும் ஃபிளிப்கார்ட்டுக்கும் தான் கடும் போட்டி. இதனால் விழாக்காலங்களுக்கு முன்பே இந்த இரு நிறுவனங்களின் தளங்களும் விழாக்கோலம் பூண்டுவிடும். அந்த அளவிற்கு வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக அதிரடியான சலுகைகள், தள்ளுபடிகளை வாரி வழங்குவார்கள். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா ஊரடங்கு காலம் இருந்ததால் பெரியளவில் லாபம் ஈட்ட முடியாமல் இதுபோன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் தவித்து வந்தன. சில மாதங்களுக்கு முன் நிலைமை சீரான பின்னரே மீண்டெழ ஆரம்பித்தன. தற்போது
 

இந்தியாவின் பிரபல இ-காமர்ஸ் நிறுவனம் ஃபிளிப்கார்ட். அமேசானுக்கும் ஃபிளிப்கார்ட்டுக்கும் தான் கடும் போட்டி. இதனால் விழாக்காலங்களுக்கு முன்பே இந்த இரு நிறுவனங்களின் தளங்களும் விழாக்கோலம் பூண்டுவிடும். அந்த அளவிற்கு வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக அதிரடியான சலுகைகள், தள்ளுபடிகளை வாரி வழங்குவார்கள். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா ஊரடங்கு காலம் இருந்ததால் பெரியளவில் லாபம் ஈட்ட முடியாமல் இதுபோன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் தவித்து வந்தன.

சில மாதங்களுக்கு முன் நிலைமை சீரான பின்னரே மீண்டெழ ஆரம்பித்தன. தற்போது ஃபிளிப்கார்ட் நிறுவனம் Big Saving Days என்ற பெயரில் சலுகைகளை அறிவித்திருக்கிறது. இந்தச் சலுகைக் காலம் மே 2ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் காலங்களில் ஸ்மார்போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிகப்படியான சலுகைகள் அளிக்கப்படும் என ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு நினைத்ததை விட அதிக சதவீத தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. ஆப்பிள், விவோ, ஆஸஸ், ஜியோமி ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கும் அதிரடியான சலுகைகள் வெளியாகவுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 80% வரையிலும் ஸ்மார்ட் டிவிக்களுக்கு 75% வரையிலும் தள்ளுபடி அளிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னோட்டமாக ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள் வெளியிட்டிருக்கிறது.

Samsung Galaxy F62 – விலை ரூ.17,999, Samsung Galaxy F41 6GB + 128GB – விலை ரூ.14,499, Samsung Galaxy F12 – விலை ரூ.9,999 ஆகிய மூன்று போன்களின் விலையும் வெளியிட்டிருக்கிறது. தற்போது 58 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகும் ஐபோன் 11 மாடல் 44 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன், ப்ளுடூத் ஸ்பீக்கர் ஆகியவற்றுக்கு 70% தள்ளுபடியும் லேப்டாப், பவர்பேங்க் ஆகியவற்றுக்கு 40% தள்ளுபடியும் அறிவிக்கப்படுகிறது. ஒன்பிளஸ் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி 14 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது.