×

பப்ஜிக்கு எதிராக களமிறங்கும் FAU-G: முன்பதிவில் சாதனை!

பப்ஜிக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகியிருக்கும் FAU-G கேமை சுமார் 40 லட்சம் கேமர்கள் Pre-registration செய்திருப்பதாக nCore Games இணை நிறுவனர் விஷால் கொண்டல் தெரிவித்திருக்கிறார். சிறுவர்கள், இளைஞர்களின் நாடித்துடிப்பாக விளங்கியது பப்ஜி கேம். விளையாட்டுப் பிரியர்களின் பெருவாரியான சாய்ஸாக பப்ஜி இருந்தது. சாப்பிட மறந்தாலும் பப்ஜியில் விளையாட மறக்க மாட்டார்கள். பப்ஜியால் பணம் முதல் உயிர் வரை இழந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பப்ஜி கேமை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு இந்தியாவில் தடை செய்தது. பயனர்களின்
 

பப்ஜிக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகியிருக்கும் FAU-G கேமை சுமார் 40 லட்சம் கேமர்கள் Pre-registration செய்திருப்பதாக nCore Games இணை நிறுவனர் விஷால் கொண்டல் தெரிவித்திருக்கிறார்.

சிறுவர்கள், இளைஞர்களின் நாடித்துடிப்பாக விளங்கியது பப்ஜி கேம். விளையாட்டுப் பிரியர்களின் பெருவாரியான சாய்ஸாக பப்ஜி இருந்தது. சாப்பிட மறந்தாலும் பப்ஜியில் விளையாட மறக்க மாட்டார்கள். பப்ஜியால் பணம் முதல் உயிர் வரை இழந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பப்ஜி கேமை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு இந்தியாவில் தடை செய்தது. பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி தடை செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு கேமர்களை தூக்கிவாரிப் போட்டது.

பப்ஜியை தவிர்த்து வேறு எந்த கேமையும் கனவில் கூட நினைத்திடாத அவர்களுக்கு மிகப்பெரிய ஷாக். இந்த ஷாக்கை குறைப்பதற்காக இந்தியாவிலேயே பப்ஜி போன்று FAU-G (The Fearless and United Guards) என்ற பெயரில் ஒரு கேமை nCore Games நிறுவனம் கண்டுபிடித்தது. ஆரம்பத்தில் இதற்கு பெரிய வரவேற்பு இல்லை என்ற போதிலும், தற்போது ஏராளாமானோர் முன்பதிவு (Pre-registration) செய்துள்ளனர்.

நடிகர் அக்‌ஷய் குமார் இந்த கேமின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார். FAU-G கேம் வருகைக்கான அறிவிப்பை அவர் தான் வெளியிட்டார். இந்த கேம் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.

முன்னதாக, நவம்பர் மாதம் கூகுள் பிளே ஸ்டோரில் இந்த கேம் அப்டேட் செய்யப்பட்டது. அதில் Pre-registration ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆப்சனை கிளிக் செய்தால், கேம் ரிலீஸாகும் நேரம் உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும்.

அந்த வகையில் தற்போது வரை 40 லட்சம் கேமர்கள் Pre-registration செய்திருப்பதாக nCore Games இணை நிறுவனர் விஷால் கொண்டல் தெரிவித்திருக்கிறார்.

முன்பதிவு ஆரம்பமான முதல் நாளிலேயே 10 லட்சம் கேமர்கள் Pre-registration செய்ததாகவும் கூறினார். இந்த கேம் சைஸ் ஸ்மார்ட்போன்களின் மாடல்களை பொறுத்து மாறுபடும் என்று கூறிய அவர், ஐபோன், ஐபேட்களிலும் வெளியாகும் என்றார்.