×

உங்கள் பேஸ்புக் ஐடியை யார் யார் நோட்டமிடுகிறார்கள்? – சிம்பிள் ட்ரிக் தான் ஈஸியா கண்டுபிடிக்கலாம்!

பேஸ்புக்கில் நாம் வைக்கும் ஸ்டோரியை யார் யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பது தெரியும். ஆனால் நம்முடைய நியூஸ்ஃபீடில் போடும் ஸ்டேட்டஸ்களை யார் படிக்கிறார்கள் என்பது தெரியவே தெரியாது என்பது எல்லோருக்கும் தெரியும். படிப்பவர்கள் லைக் அல்லது கமெண்ட் செய்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் நம்முடைய பேஸ்புக்கை நோட்டமிடுகிறார்கள் என்பது நமக்கு தெரியவரும். யார் நம்மை சத்தமில்லாமல் நோட்டமிடுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. ஆனால் ஐபோன் பயனர்களுக்கு அந்த ரகசியம் தெரியுமாம். iOS ஸ்மார்ட்போன்களில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்
 

பேஸ்புக்கில் நாம் வைக்கும் ஸ்டோரியை யார் யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பது தெரியும். ஆனால் நம்முடைய நியூஸ்ஃபீடில் போடும் ஸ்டேட்டஸ்களை யார் படிக்கிறார்கள் என்பது தெரியவே தெரியாது என்பது எல்லோருக்கும் தெரியும். படிப்பவர்கள் லைக் அல்லது கமெண்ட் செய்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் நம்முடைய பேஸ்புக்கை நோட்டமிடுகிறார்கள் என்பது நமக்கு தெரியவரும். யார் நம்மை சத்தமில்லாமல் நோட்டமிடுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது.

ஆனால் ஐபோன் பயனர்களுக்கு அந்த ரகசியம் தெரியுமாம். iOS ஸ்மார்ட்போன்களில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் இந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ளும் அம்சத்தை பேஸ்புக் நிறுவனம் வழங்கியிருக்கிறது. அதாவது நம்மை நோட்டமிடுபவர்கள் கணிணி மூலம் பேஸ்புக்கில் நம் ஐடியை பார்க்கும் சமயம் பார்த்து நம்முடைய பேஸ்புக் பிரைவசி செட்டிங்ஸில் நாம் பார்த்தால் அவர்களைக் கண்டுபிடித்து விடலாம்.

iOS பயனர்கள் எப்படி நோட்டமிடுபவர்களைத் தெரிந்துகொள்ளுவது?

Facebook settings -> Privacy Shortcuts -> Who viewed my profile என்ற வரிசையில் செட்டிங்ஸ் உள்ளே சென்றால் யார் நோட்டமிட்டார்கள் என்பதைக் கண்டறிந்து விடலாம். முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த அம்சம் iOS பயனர்களுக்கு மட்டுமே பேஸ்புக் அளித்துள்ளது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் கொடுக்கப்படவில்லை. வருங்காலத்தில் இந்த அம்சத்தை பேஸ்புக் இணைக்கலாம் என்று கூறப்படுகிறது.

சரி ஆன்ட்ராய்டு பயனர்கள் எப்படி தெரிந்துகொள்ளலாம்?

முன்னரே சொன்னதுபோல வெளிப்படையாக ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு செட்டிங்ஸ் இல்லை. ஆனால் கணிணியில் பேஸ்புக் லாக்இன் செய்தால் நம்மை யார் யாரெல்லாம் நோட்டமிடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். முதலில் உங்களது பேஸ்புக் ஐடியை கணிணியில் லாக்இன் செய்துகொள்ளுங்கள். அதற்குப் பின் எங்கேயாவது Right click செய்யுங்கள். அப்போது view page source என்ற ஆப்சன் வரும்.

அதை கிளிக் செய்தால் அடுத்த வின்டோவில் ஓபன் ஆகும். அந்தப் பக்கத்தில் BUDDY_ID என்று தேடுங்கள். அப்போது 15 இலக்கங்களில் உங்களுக்கு ஒரு எண் கிடைக்கும். இதை காப்பி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்குப் பின் facebook.com/15 இலக்க எண்களை பேஸ்ட் செய்யுங்கள். இப்போது இந்த முகவரியை search செய்தால் யார் உங்களுடைய ஐடியை நோட்டமிட்டார்களோ அவர்களின் ஐடி வந்துவிடும்.