×

Cam Scanner செயலியை மொபைலிருந்து நீக்க கூகுள் அறிவுறுத்தல்

கூகுள் ப்ளே ஸ்டோரிலுள்ள Dangerous Apps என்ற பட்டியலில் தற்போது CAM SCANNER என்ற செயலியும் இணைந்துள்ளது. அதனை உடனே மொபைல் போன்களிலிருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆபத்தான செயலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அண்மையில் ‘Dangerous Apps’ என்ற பெயரில் ஏராளமான செயலிகளை வெளியிட்டு அதனை ப்ளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியது. இந்நிலையில் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள CamScanner என்ற செயலியில்
 

கூகுள் ப்ளே ஸ்டோரிலுள்ள Dangerous Apps என்ற பட்டியலில் தற்போது CAM SCANNER என்ற செயலியும் இணைந்துள்ளது. அதனை உடனே மொபைல் போன்களிலிருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.  

கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆபத்தான செயலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அண்மையில் ‘Dangerous Apps’ என்ற பெயரில் ஏராளமான செயலிகளை வெளியிட்டு அதனை ப்ளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியது. இந்நிலையில் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள  CamScanner என்ற செயலியில் மால்வேர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் CamScanner என்ற செயலியை லட்சக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திவருகின்றனர். கேம் ஸ்கேனர் என்ற செயலியின் மூலம் ஒரு சான்றிதழை ஸ்கேன் செய்து அதனுடைய ஃபார்மெட்டை மாற்றி பிறருக்கு அனுப்பலாம். கேம் ஸ்கேனர் செயலியில் வணிக வருவாய்க்காக ஏராளமான விளம்பரங்கள் இடம்பெறுவதுண்டு. இதிலுள்ள போலி விளம்பரங்களின் மூலம் மால்வேர் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

“ட்ரோஜன் டிராப்பர்” எனும் மால்வேர் இருப்பதாகவும், இதன்மூலம் கேம் ஸ்கேனர் வழியாக பயனர்களின் வங்கி தகவல்கள் மற்றும் தனிப்பட்ட ரகசியங்கள் ஹேக்கர்களால் திருடப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. OCR எனப்படும் ஆப்டிகல் கேரக்டர் ரெக்னிகேஷன் மூலம் ஸ்மார்ட்போன் வழியாக ஊடுருவி தகவல்கள் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த கூகுள் நிறுவனம் இந்த செயலியை உடனே நீக்கும்படி பயனாளர்களை அறிவுறுத்தியுள்ளது.