×

திடீரென 25% உயர்ந்த ஏர்டெல் ப்ரீபெய்டு கட்டணங்கள் - பயனர்களுக்கு ஷாக் நியூஸ்!

 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தை ஜியோவுக்கு முன் ஜியோவுக்கு பின் என பிரிக்கலாம். ஜியோ வருகைக்கு முன்னர் 4ஜி டேட்டாவை வசதி படைத்தோர் மட்டுமே உபயோகப்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஏர்டெல் சிம் பயன்படுத்துவது யானைக்கு தீனி போடுவதே போல டாரிஃப் கட்டணங்கள் இருந்தன. ஆனால் ஜியோ தொலைத்தொடர்பு துறைக்குள் நுழைந்த உடன், இலவச 4ஜி டேட்டாவை அறிவிக்க ஏர்டெல், வோடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் பலத்த அடிவாங்கின.

வேறு வழியில்லாமல் பிளான்களின் கட்டணத்தைக் குறைத்து இறங்கிவந்தன. தற்போது ஏர்டெல்லை தவிர அனைத்து சிம்களின் பிளான்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலையாகவே இருந்தது. ஏர்டெல் பிளான்களின் விலை மற்றவையை விட 50 ரூபாய் அதிகமாகவே இருந்தது. நாங்கள் சிறப்பான சேவை அளிக்கிறோம்; அதற்கு அதிகமாக வசூலிக்கிறோம் என விளக்கமளித்தார்கள். இச்சூழலில் தற்போது ப்ரீபெய்டு கட்டணங்களை மேலும் 25% அதிகரித்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இதன்மூலம் ஏர்டெல் ப்ரீபெய்டு கட்டணங்கள் ஆரம்பிப்பதே 99 ரூபாயில் தான். இது முன்பு 79 ரூபாயாக இருந்தது. 

இந்த பிளானில் உங்களால் யாருக்கும் மெசெஜ் அனுப்ப முடியாது. யாராவது அனுப்பினால் வரும். இதை விட்டால் 300 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி கொண்ட பிளான் 149 ரூபாயாக இருந்தது. அது தற்போது 179 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல 1,498 ரூபாய் பிளான் 1,799 ரூபாயகவும்,  2,498 ரூபாய் திட்டம் 2,999 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. டேட்டா டாப்-அப்களுக்கு இப்போது முறையே ரூ.58 (ரூ. 48), ரூ.118 (ரூ. 98) மற்றும் ரூ.301 (ரூ. 251) உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல மற்ற கட்டணங்களும் 25% உயர்ந்திருக்கிறது. இந்த கட்டண உயர்வு நவம்பர் 26ஆம் தேதி நடைமுறைக்கு வருகிறது.