×

ஆடைகளில் ஊடுருவி படம் பிடிக்கும் புதிய செல்போன் ரகங்கள்… காற்றில் பறக்கும் அந்தரங்கம்!

சீனாவை சேர்ந்த பிரபல செல்போன் நிறுவனம் ஒன்று ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் எக்ஸ்ரே கருவிகள் போன்ற அக சிவப்பு கதிர்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் போன்ற பொருட்களை உள்ளே சென்று அதனை போட்டோ எடுக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. முதலில் கேமரா ஆன் செய்து போட்டோ க்ரோம் என்ற கலர் ஃபில்டரை ஸ்வைப் செய்து கண்ணுக்கு தெரியாத பொருட்களை போட்டோ எடுக்க ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ள இந்த ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலம் பிளாஸ்டிக் போன்ற
 

சீனாவை சேர்ந்த பிரபல செல்போன் நிறுவனம் ஒன்று ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.  அதில் எக்ஸ்ரே கருவிகள் போன்ற அக சிவப்பு கதிர்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் போன்ற பொருட்களை உள்ளே சென்று அதனை போட்டோ எடுக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. முதலில் கேமரா ஆன் செய்து போட்டோ க்ரோம் என்ற கலர் ஃபில்டரை ஸ்வைப் செய்து கண்ணுக்கு தெரியாத பொருட்களை போட்டோ எடுக்க ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ள இந்த ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இதன் மூலம் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை ஊடுருவி புகைப்படம் எடுப்பதை நாம் காணலாம். இந்த தொழில்நுட்பம்  பல பொது மக்களால் பரிசோதனை செய்யப்பட்டது।  மேலும் மெல்லிய கருப்பு டீசர்ட்டில் கூட ஊடுருவி படம் எடுப்பதை கூட பலரும் ரசித்தனர். ஆனால்  இது எப்படி வேலை செய்கிறது என்பதை தயாரிப்பு நிறுவனம் கூற மறுத்துவிட்டது.

இந்த கேமராவை பயன்படுத்தி மனிதர்களின் ஆடைகளை ஊடுருவி படம் எடுக்க முடியும் என்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது . ஆனால் இதனால் பலரின் அந்தரங்கம் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக பெண்களுக்கு இதுபோன்ற கேமரா பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.  எனவே இதை பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.