×

இன்று முதல் விற்பனைக்கு வந்தது Realme GT 2 - என்ன விலை தெரியுமா ?

 

Realme GT 2 செல்போன் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Realme சீனாவை சேர்ந்த எலக்டரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் குறைந்த விலையில் செல்போன்களை விற்பனை செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதுவரை ஏராளமான செல்போன்களை வெளியிட்டுள்ள இந்நிறுவனம் கடந்த வாரம் Realme GT 2 மாடலை அறிமுகம் செய்ததோடு, இன்று நண்பகல் 12 மணி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதன் படி சரியாக நண்பகல் 12 மணி முதல் இந்த செல்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. 

Flipkart மற்றும் Realme நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த போனை வாங்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போன் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஸ் மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வகைகளில் இந்த செல்போன் விற்பனைக்கு வந்துள்ள நிலையில்  8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை 34,999 ரூபாய் எனவும், 12 ஜிபி + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை 38,999 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  HDFC வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் 5000 ரூபாய் உடனடி தள்ளுபடியுடன் போனை வாங்கலாம்.   

1080x2400 பிக்சல் ரெஸலுசன் கொண்ட 6.62 இன்ச் முழு HD + AMOLED டிஸ்ப்ளே உள்ள இந்த செல்போனில்,  கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் 120Hz அப்டேட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 12ஜிபி வரை LPDDR5 ரேம் மற்றும் 256ஜிபி வரை UFS 3.1 ஸ்டோரேஜ் உள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 888 SoC ஐ வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.  65W SuperDart சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை ஜார்ஜிங் ஆக வெறும் 33 நிமிடங்கள் மட்டுமே போதும். 162.9x75.8x8.6mm நீல அகலம் கொண்ட இந்த மாடலின் எடை 199.8 கிராம் ஆகும்.