×

88 இன்ச் அளவில் மெகா 8K ஓஎல்இடி திரை கொண்ட புதிய டிவியை அறிமுகம் செய்யவுள்ள எல்.ஜி!

எல்.ஜி நிறுவனம் 88 இன்ச் அளவில் மெகா ஓஎல்இடி திரை கொண்ட புதிய டிவியை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லாஸ் வேகாஸ்: எல்.ஜி நிறுவனம் 88 இன்ச் அளவில் மெகா ஓஎல்இடி திரை கொண்ட புதிய டிவியை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் சிஇஎஸ் 2019 நிகழ்வு ஜன.8 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் எல்.ஜி நிறுவனம் 88 இன்ச் அளவில் மெகா 8K ஓஎல்இடி
 

எல்.ஜி நிறுவனம் 88 இன்ச் அளவில் மெகா ஓஎல்இடி திரை கொண்ட புதிய டிவியை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லாஸ் வேகாஸ்: எல்.ஜி நிறுவனம் 88 இன்ச் அளவில் மெகா ஓஎல்இடி திரை கொண்ட புதிய டிவியை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் சிஇஎஸ் 2019 நிகழ்வு ஜன.8 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் எல்.ஜி நிறுவனம் 88 இன்ச் அளவில் மெகா 8K ஓஎல்இடி திரை கொண்ட புதிய டிவியையும், 65 இன்ச் அளவில் மெகா 8K ஓஎல்இடி திரை கொண்ட புதிய டிவியையும்,  65 இன்ச் அளவில் மெகா 4K ஓஎல்இடி திரை கொண்ட புதிய டிவியையும் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டிவிக்களின் திரையிலேயே ஸ்பீக்கர்கள் இடம்பெற்று இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது 3.2.2 சேனல் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம் கொண்ட ஸ்பீக்கர்கள் இருக்குமாம்.

இதுதவிர 27 இன்ச் மற்றும் 13.3 இன்ச் 4k டிஸ்பிளே அளவுகளில் இரண்டு புதிய டிவிக்களையும் எல்.ஜி நிறுவனம் அறிமுகம் செய்யவிருப்பதாக தெரிகிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறவுள்ள சிஇஎஸ் 2019 நிகழ்வுக்கு உலகின் பல்வேறு எலக்ட்ரானிக் நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. இந்த வருடம் புதிய தொழில்நுட்பம் கொண்ட எக்கச்சக்கமான சாதனங்கள் சந்தைக்கு வரும் என்று தொழில்நுட்ப வல்லுனர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.