×

65 இன்ச் பிரம்மாண்ட திரை கொண்ட எம்.ஐ டிவி 4எஸ் மாடல் அறிமுகம்

65 இன்ச் பிரம்மாண்ட திரை கொண்ட எம்.ஐ டிவி 4எஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெய்ஜிங்: 65 இன்ச் பிரம்மாண்ட திரை கொண்ட எம்.ஐ டிவி 4எஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எம்.ஐ டிவி 4எஸ் மாடல் வெள்ளிக்கிழமை சியோமியின் ஆன்லைன் நிகழ்வின்போது அறிமுகமானது. இந்த புதிய மாடலில் 4K மற்றும் எச்டிஆர் 10 + ஆதரவுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் டிடிஎஸ்-எச்டி மற்றும் டால்பி ஆடியோ ஒலி அனுபவத்தையும் கொண்டுள்ளது. இதன் விலை
 

65 இன்ச் பிரம்மாண்ட திரை கொண்ட எம்.ஐ டிவி 4எஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: 65 இன்ச் பிரம்மாண்ட திரை கொண்ட எம்.ஐ டிவி 4எஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எம்.ஐ டிவி 4எஸ் மாடல் வெள்ளிக்கிழமை சியோமியின் ஆன்லைன் நிகழ்வின்போது அறிமுகமானது. இந்த புதிய மாடலில் 4K மற்றும் எச்டிஆர் 10 + ஆதரவுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் டிடிஎஸ்-எச்டி மற்றும் டால்பி ஆடியோ ஒலி அனுபவத்தையும் கொண்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் தோராயமாக சுமார் ரூ.45,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் ஐரோப்பிய சந்தைகளில் இந்த டிவி மாடல் விற்பனைக்கு வருகிறது.

ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம், ஐடிஎஸ் டிஸ்ப்ளே பேனல், எச்டிஆர் 10+, 4K ரெசல்யூஷன், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், யூடியூப் ஆப்கள், மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், மூன்று யூ.எஸ்.பி போர்ட்கள், டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத், குரோம்காஸ்ட் ஆதரவு, குரல் ரிமோட் கண்ட்ரோல், இரண்டு 10W ஸ்பீக்கர்கள் ஆகிய சிறப்பம்சங்கள் இந்த டிவியில் இடம்பெற்றுள்ளன. முன்னதாக சியோமி 43, 55, மற்றும் 75 இன்ச் திரை அளவுகளில்எம்.ஐ டிவி 4எஸ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.