×

21 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் ஆண்டவர்! 

கேட்கும் தகவல்களை எல்லாம் அள்ளித்தந்து நூறு கோடிக்கும் மேலான மக்களை கட்டிப்போட்டிருக்கும் தேடுப்பொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் இன்று தனது 21-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறது. இதை சிறப்பிக்கும் விதமாக கூகுள் தளத்தின் இன்றைய டூடுல் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பல சாதனைகளைப் படைத்து தன்னிகரற்று ஜொலிக்கும் நிறுவனம் கூகுள், தேடுபொறியில் தொடங்கி, மென்பொருள்கள், ஆன்லைன் விளம்பரம், வன்பொருள்கள், மொபைல் என அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்திருக்கிறது. கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ்
 

கேட்கும் தகவல்களை எல்லாம் அள்ளித்தந்து நூறு கோடிக்கும் மேலான மக்களை கட்டிப்போட்டிருக்கும் தேடுப்பொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் இன்று தனது 21-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறது. இதை சிறப்பிக்கும் விதமாக கூகுள் தளத்தின் இன்றைய டூடுல் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பல சாதனைகளைப் படைத்து தன்னிகரற்று ஜொலிக்கும் நிறுவனம் கூகுள், தேடுபொறியில் தொடங்கி, மென்பொருள்கள், ஆன்லைன் விளம்பரம், வன்பொருள்கள், மொபைல் என அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்திருக்கிறது. கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு தொடங்கிய கூகுள் நிறுவனம் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. கடந்த 2001ஆம் ஆண்டு தனது தொழில்நுட்பத்திற்காக கூகுள் காப்புரிமை பெற்றது.கூகுள் நிறுவன‌ம் பல்வேறு தொழில்களில் கிளை பரப்பியுள்ள நிலையில், இதன் மொத்த தொழில்களும் ஆல்ஃபாபெட் என்ற குடையின் கீழ் வந்துள்ளது. கூகுளின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக கூகுள் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.