×

“ஓபனிங்னு வந்துட்டா.. நான் தான்” என்ற பாணியில் ஆடி அசத்திய ரோஹித்..!!

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. பொதுவாக, டெஸ்ட் போட்டிகளில் நடு வரிசையில் களமிறங்கும் ரோகித் சர்மா இம்முறை துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். இவருடன் மயங்க் அகர்வால் களமிறங்கினார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஓபனிங் இறங்கி சதமடித்து அசத்திய ரோகித் சர்மாவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு போட்டிகள்
 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

பொதுவாக, டெஸ்ட் போட்டிகளில் நடு வரிசையில் களமிறங்கும் ரோகித் சர்மா இம்முறை துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். இவருடன் மயங்க் அகர்வால் களமிறங்கினார். 

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஓபனிங் இறங்கி சதமடித்து அசத்திய ரோகித் சர்மாவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

பொதுவாக, டெஸ்ட் போட்டிகளில் நடு வரிசையில் களமிறங்கும் ரோகித் சர்மா இம்முறை துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். இவருடன் மயங்க் அகர்வால் களமிறங்கினார். 

துவக்கம் முதலே சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா அரைசதம் அடித்த உடன் ரசிகர்கள், நிச்சயம் இன்றைய போட்டியில் ரோஹித் 200 ரன்கள் அடிப்பார் என ட்விட்டரில் புகழ்பாட துவங்கினர். அதற்கேற்றார்போல நிதானமாக ஆடி வந்த ரோகித் சர்மா பந்தை பவுண்டரி சிக்சர்களாக விளாசி சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் இவருக்கு பக்கபலமாக இருந்த மயங்க் அகர்வால் அரை சதம் அடித்து இந்திய அணிக்கு நிலையான துவக்கத்தை அமைக்க உதவினார். 

ரோஹித் சர்மா 115 ரன்களும், மயங்க் அகர்வால் 84 ரன்களை எடுத்து களத்தில் இருந்தனர். அச்சமயம் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து மழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. 59.1 ஓவர்கள் ஆடியதில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் குவித்து வலுவான துவக்கம் பெற்றது. இன்றைய சதத்தின் மூலம் டெஸ்ட் போட்டியில் ரோகித்சர்மா அடிக்கும் நான்காவது சதம் இதுவாகும். இந்நிலையில் நிச்சயம் இரட்டை சதம் அல்லது முச்சதம் ரோகித் சர்மா ஏற்றுவார் என ட்விட்டரில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

மறுபக்கம், தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழல் பந்துவீச்சாளர்கள் இந்திய துவக்க வீரர்களை விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.  மழையின் குறுக்கீடு இல்லாமல் இருந்தால், இந்திய அணி 350 ரன்களை எளிதாக எட்டி இருக்கும்.

-vicky