×

ரோகித் சதம்.. சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி!

அடுத்தடுத்த 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை, சதம் அடித்து சரிவிலிருந்து மீட்டுள்ளார் துவக்க வீரர் ரோகித் சர்மா. இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் களம் கண்டனர். துரதிஸ்டவசமாக 10 ரன்களுக்கு மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தடுத்த 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை,
 
அடுத்தடுத்த 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை, சதம் அடித்து சரிவிலிருந்து மீட்டுள்ளார் துவக்க வீரர் ரோகித் சர்மா.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் களம் கண்டனர். துரதிஸ்டவசமாக 10 ரன்களுக்கு மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறினார். 

அடுத்துவந்த புஜாராவும் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் கண்ட கேப்டன் கோலி அடுத்ததாக களமிறங்கி ஓரிரு பவுண்டரிகளை அடித்தார். ஆனால், அவரும் நீடித்து ஆடவில்லை. 12 ரன்களுக்கு நார்ஜெவின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதனால் உணவு இடைவேளைக்கு முன்பாக இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் திணறியது. 

உணவு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் களம் இறங்கிய இந்திய அணிக்கு முதல் ஷெஷன் போல அல்லாமல், இம்முறை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த பவுண்டரிகளை விளாசி, ரஹானே மற்றும் ரோஹித் இருவரும் வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அரைசதம் கண்ட ரோகித் சர்மா சிக்சர்கள் விளாசி இத்தொடரின் மூன்றாவது சதத்தையும் பூர்த்தி செய்தார். டெஸ்ட் அரங்கில் இது இவரது 6வது சதம் ஆகும்.

மறுமுனையில் இவருடன் சேர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய ரஹானே 70 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த ஜோடியின் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி தற்போது திணறி வருகிறது.

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. நான்காவது விக்கெட்டுக்கு ரஹானே-ரோஹித் ஜோடி இதுவரை 166 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 108 ரன்களுடனும் ரஹானே 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

-vicky