×

கரூரில் சைக்கிளில் சென்று உணவு விநியோகம்

உணவு ஆர்டர் செய்தால் 15 நிமிடத்தில் சைக்கிளில் வந்து சேரும் ! கரூரையே கலக்கும் கல்லூரி மாணவருக்கு குவியும் பாராட்டு ! கரூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் சைக்கிளில் சென்றே உணவு விநியோகம் செய்து உழைப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர். உணவு ஆர்டர் செய்த 15வது நிமிடத்தில் அவர் டெலிவரி செய்துவிடுவதால் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டாக்டர் ஆகலாம், பொறியாளர் ஆகலாம், தொழிலதிபர் ஆகலாம் என எதிர்கால கனவுகளுடன் கல்லூரி மாணவர்கள் பலர் குறைந்த சம்பளத்திற்கான
 

உணவு ஆர்டர் செய்தால் 15 நிமிடத்தில் சைக்கிளில் வந்து சேரும் ! கரூரையே கலக்கும் கல்லூரி மாணவருக்கு குவியும் பாராட்டு !

கரூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் சைக்கிளில் சென்றே உணவு விநியோகம் செய்து உழைப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

உணவு ஆர்டர் செய்த 15வது நிமிடத்தில் அவர் டெலிவரி செய்துவிடுவதால் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டாக்டர் ஆகலாம், பொறியாளர் ஆகலாம், தொழிலதிபர் ஆகலாம் என எதிர்கால கனவுகளுடன் கல்லூரி மாணவர்கள் பலர் குறைந்த சம்பளத்திற்கான வேலையை மதிப்பதில்லை. அவர்களை பொறுத்தவரை அது எழுத படிக்கத் தெரியாதவர்கள் செய்யவேண்டியது. அதை நாம் செய்தால் சமுதாயத்தில் நம்மை அவமானமாக பார்ப்பர் என்று வெட்கப்பட்டு வாழ்க்கையை வறுமையிலேயே கழித்துக் கொண்டிருப்பர்.

ஆனால் கரூரைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர் வாழ்வியலுக்காக சைக்கிளில் உணவு டெலிவரி செய்து தனது படிப்பையும் கைவிடாமல், குடும்பத்தையும் கவனித்து வருகிறார் என்றால் நாம் அனைவரும் பாராட்டியே ஆகவேண்டும்.

பொன்னுசாமி, ரேவதி தம்பதியின் 19 வயதான கல்லூரி மாணவர் பெயர் ரகுநாத். அவருக்கு கற்பகவள்ளி என்ற தங்கை 6ம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை மெக்கானிக் வேலை செய்கிறார். தாய் கூலி வேலை செய்து தன்னால் முடிந்தவரை குடும்பத்திற்காக உழைக்கிறார். சொந்தமாக நிலம் கூட இல்லாத நிலையில் ரகுநாத்தின் குடும்ப வருமானம் செலவுகள் போக 11,000 மட்டுமே. இந்த வருமானத்தில் 4 பேரிக்கு உணவு, படிப்பு செலவு, துணிமணி எல்லாமே எட்டா கனிபோல்தான் இருக்கிறது இவர்களுக்கு. இதனால் குடும்பத்தின் நிலைமையை மனதில் கொண்டு 11ம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே வேலைக்கு செல்லத் தொடங்கினார் ரகுநாத். பின்னர் அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை பகுதிநேரமாக படித்து வந்த ரகுநாத் கல்லூரியில் பி.சி.ஏ  படிப்பை தேர்வு செய்தார்.

பிரபல உணவு டெலிவெரி ஸ்டார்ட் அப் கம்பெனியில வேலைக்கு சேர்ந்த ரகுநாத் நாள்தோறும் கல்லூரி முடிந்தவுடன்  இரவு 11 மணிவரை வேலை செய்கிறார்.

கல்லூரி படிக்கும்போது ஏன் இந்த வேலை என சக மாணவர்கள், ஊழியர்கள் வேலி செய்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாது உழைத்து முன்னேறுகிறார் ரகுநாத். தற்போது மாதம் 4,000 ரூபாய் வரை சம்பாதிக்கும் ரகுநாத்தை கரூர் ரயில்வே ஸ்டேஷன் ஊழியரே பாராட்டி விட்டார் என்று பாருங்களேன் !