×

உலக சிட்டுக்குருவி தினம்… குருவிகளுக்கு உணவளித்து மகிழும் புகைப்படக் கலைஞர்..

திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் உள்ள தனது வீட்டில் சிட்டுக்குருவிகளுக்காக குடுவையில் தண்ணீர், தானியங்கள் வைத்து,அவை கூடு கட்டவும் வழி செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஆனந்த். அவரது இந்த முயற்சி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. முன்பு வீடுகளுக்குள் கூட்டமாக வந்து செல்லும் சிட்டுக்குருவி, இன்று அழிந்து வரும் பறவையினங்களின் பட்டியலில் உள்ளது. மொபைல் போன் அலைவரிசை காரணமாக சிட்டுக் குருவிகள் அழிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பறவை கண்காணிப்பு அமைப்பு, 2010-ம் ஆண்டு
 

திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் உள்ள தனது வீட்டில் சிட்டுக்குருவிகளுக்காக குடுவையில் தண்ணீர், தானியங்கள் வைத்து,அவை கூடு கட்டவும் வழி செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஆனந்த். அவரது இந்த முயற்சி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

முன்பு வீடுகளுக்குள் கூட்டமாக வந்து செல்லும் சிட்டுக்குருவி, இன்று அழிந்து வரும் பறவையினங்களின் பட்டியலில் உள்ளது. மொபைல் போன் அலைவரிசை காரணமாக சிட்டுக் குருவிகள் அழிந்து வருவதாகவும்  கூறப்படுகிறது. சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பறவை கண்காணிப்பு அமைப்பு,  2010-ம் ஆண்டு முதல் மார்ச் 20  ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

கிராமங்களில் அதிகளவில் வாழ்ந்த சிட்டு குருவிகள், அழிவதற்க்கு காரணம் அவற்றிற்கு உண்ண உணவு இல்லாமல் போனதே ஆகும். பொதுவாக சிட்டு குருவிகள் தங்கள் உணவாக வயல் வெளிகளில் உள்ள பூச்சிகளையும் நெல் தானியங்களையும் உண்டு வாழ்பவை. ஆனால் தற்போது விவசாயிகள் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவில் பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள நச்சுத்தன்மையும் சிட்டு குருவிகளின் அழிவிற்கு காரணமாக உள்ளது.

இத்தகைய சூழலில் சினிமா ஒளிப்பதிவாளர் அருள்தாஸின் உதவியாளரும், புகைப்படக் கலைஞருமான ஷன்பகி ஆனந்த் தன் வீட்டில் சிட்டுக்குருவிகள் வாழ ஏற்பாடு செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் உள்ள தனது வீட்டில் சிட்டுக்குருவிகளுக்காக குடுவையில் தண்ணீர், தானியங்கள் வைத்து,அவை கூடு கட்டவும் வழி செய்துள்ளார். ஆனந்தின் இந்த முயற்சி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. உலக சிட்டுக்குருவி தினமான இன்று அவரது வீட்டில் குருவிகள் இருப்பதையும், கூடு கட்டியிருப்பதையும் ஆனந்த் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.

மார்ச் 20. #உலகசிட்டுக்குருவிகள்தினம். கொண்டறங்கி கீரனூர் எனது வீட்டின் கிழக்கு புறம் எப்போதும் இந்த ஜீவன்களுக்கு…

Posted by Shunpakee Anand on Thursday, March 19, 2020

 

ஆனந்தின் இந்த முயற்சியைப் பார்த்து பலரும் அவர்களது வீடுகளில்  சிட்டுக்குருவிகளுக்கு வாழ்விடம் அமைத்துத் தருகின்றனர்.