×

மகளிர் டி20 உலகக் கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி எளிதில் வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. மெல்போர்ன்: மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவையும், அடுத்த போட்டியில் வங்காளதேச அணியையும் வீழ்த்தியது. நேற்று முன்தினம் நியூசிலாந்துக்கு எதிரான லீக்
 

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

மெல்போர்ன்: மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவையும், அடுத்த போட்டியில் வங்காளதேச அணியையும் வீழ்த்தியது. நேற்று முன்தினம் நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், தனது அடுத்த லீக் போட்டியில் இலங்கையை இன்று இந்திய அணி எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சமரி 33 ரன்களும், கவிஷா 25 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராதா யாதவ் 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 14.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு இலக்கை எட்டியது. இதனால் இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. அதிகபட்சமாக ஷபாலி வெர்மா 47 ரன்கள் குவித்தார். அடுத்து அரையிறுதி போட்டியில் மார்ச் 5-ஆம் தேதி சிட்னியில் இந்திய அணி விளையாட உள்ளது.