×

தோனியைப் பற்றிய 15 சுவாரஸ்ய தகவல்கள்

இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பு, இரயில்வே அணியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் தோனி. அப்போது விளையாடும் போதெல்லாம் தோனி இறங்கினாலே சிக்ஸ், போர் என்று அடித்து வெளுப்பார். அதனால், இரயில்வே அணியினர் தோனியை ‘தீவிரவாதி’ என்று செல்லமாக அழைப்பார்கள். இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பு, இரயில்வே அணியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் தோனி. அப்போது விளையாடும் போதெல்லாம் தோனி இறங்கினாலே சிக்ஸ், போர் என்று அடித்து வெளுப்பார். அதனால், இரயில்வே அணியினர் தோனியை ‘தீவிரவாதி’ என்று செல்லமாக
 

இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பு, இரயில்வே அணியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் தோனி. அப்போது விளையாடும் போதெல்லாம் தோனி இறங்கினாலே சிக்ஸ், போர் என்று அடித்து வெளுப்பார். அதனால், இரயில்வே அணியினர் தோனியை ‘தீவிரவாதி’ என்று செல்லமாக அழைப்பார்கள்.

இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பு, இரயில்வே அணியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் தோனி. அப்போது விளையாடும் போதெல்லாம் தோனி இறங்கினாலே சிக்ஸ், போர் என்று அடித்து வெளுப்பார். அதனால், இரயில்வே அணியினர் தோனியை ‘தீவிரவாதி’ என்று செல்லமாக அழைப்பார்கள்.

1999-2000 ஆண்டுகளில் ரஞ்சி கோப்பை போட்டியில் தோனி பீகார் அணிக்காக விளையாடினார்.  அப்போது வடகிழக்கு அணிக்காக விளையாடிய பராக் தாஸை ஸ்டம்பிங் செய்தார் தோனி.  19 வருடங்கள் கழித்து ஐபிஎல் போட்டியில் பராக்கின் மகன் ரியான் பராக் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் போது, ரியான் பராக்கையும் அவுட்டாக்கினார் தோனி. தந்தை, மகன் என இருவருமே தோனியால் அவுட் ஆகியிருக்கிறார்கள்.

இந்திய அணியினரிடையே தோனியின் செல்லப் பெயர் ‘மிஸ்டர் கூல்’. ஆட்டத்தின் போக்கு எப்போதுமே தோனியை பெரிதாக பாதித்ததில்லை. அணி தோல்வியின் விளிம்பில் இருந்தாலும், பதட்டப்படாமல் வெற்றியை நோக்கி நம்பிக்கையோடு சிரித்தப்படியே போராடுவது தோனியின் வழக்கம்.

போட்டியின் கடினமான சூழலிலும் அணியின் மற்ற வீரர்களையும் அமைதியாகச் செயல்படும் படி சொல்வது தான் தோனியின் ஸ்டைல். தோனியின் பலமே அவரது அமைதி தான்.
நிறைய வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட நேரத்திற்கு வராதது பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. பயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு ஏதாவது அபராதம் விதிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் எல்லாம் நடத்தப்பட்டது. அப்போது தோனி கேப்டன் பொறுப்பில் இருந்தார். அப்போது அவர்,  `நாளையில் இருந்து, யாராவது பயிற்சிக்கு தாமதமாக வந்தால், அணியில் இருக்கும் அனைவரும் தலா ரூ.10,000 அபராதமாகக் கட்ட வேண்டும்’ என்று அபராதம் அறிவித்து ஷாக் கொடுத்தார். இன்று வரையில் யாரும் பயிற்சிக்கு தாமதமாக வருவதில்லை. 

இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான கேப்டன்ஷிப் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த நேரம். சச்சினின் கேப்டன் பதவியால், அவரது ஆட்ட பாதிப்படைய, பதவியைத் துறப்பதற்கு முன், தோனியின் பதட்டமில்லாத தன்மையை எடுத்துச் சொல்லி, அவரை கேப்டனாக நியமிக்க பரிந்துரை செய்தவர் சச்சின்.
தோனியின் ஆல் டைம் பேவரைட் ஹீரோ ஜான் ஆப்ரஹாம். இவரது இன்ஸ்பிரேஷனில் தான் ஆரம்ப கால தோனி, லாங் ஹேர் சகிதம் மைதானத்தில் துள்ளி குதித்து ஓடி வந்தார்.
மேட்ச் வின்னிங் ஹெலிகாப்டர் ஷாட்டை தோனி கற்று கொண்டது தன் நண்பர் சந்தோஷ்லாலிடம். சந்தோஷ் லால் ரஞ்சி டிராபிக்காக விளையாடியிருக்கிறார். 

கிரிக்கெட்டில் மட்டும் கிங் கிடையாது… மகேந்திர சிங் தோனி  ஃபுட்-பால் விளையாட்டிலும் சிறந்த கோல் கீப்பராக இருந்திருக்கிறார். இது இரண்டையும் விட பேட்மிட்டன் விளையாட்டு தான் தோனிக்கு பிடிச்ச விளையாட்டு.
ஐபிஎல் போட்டியின் முதல் சீசனில் தோனி தான் அதிகமாக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர். அப்போது 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு தோனி ஏலமெடுக்கப்பட்டார்.

தல அஜீத்தைப் போலவே கிரிக்கெட் தல தோனியும் பைக் பிரியர்.  விதவிதமாக 24 பைக்குகள் வைத்திருந்தாலும், தனது செல்ல புல்லட்டில் வலம் வருவது தோனியின் பொழுதுபோக்கு.
ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை தோனி மட்டும் தான் இரண்டு முறை வாங்கியிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போல கிரிக்கெட் வீரராவதற்கு முன்னால், கராக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக பணிபுரிந்தவர் தோனி.

தோனியின் இன்றைய மொத்த சொத்து மதிப்பு 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
மைதானத்திற்கு செல்லும் போது, வீரர்கள் அமர்ந்திருக்கும் பேருந்தை பல தடவை தோனியே ஓட்டிச் சென்றிருக்கிறார். சக வீரர்களிடம் கேப்டனாக மட்டுமே பழகாமல் அனைவரிடமும் அந்நியோன்யமாக பழகிய முதல் கேப்டன் என்று தோனியை கொண்டாடுகிறார்கள்.