×

தோனியின் அமைதியை ரசிக்கிறேன் – ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் நெகிழ்ச்சி!

தோனியின் அமைதி மற்றும் தன்னம்பிக்கையை தான் எப்போதும் ரசிக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் புகழ்ந்துள்ளார். தோனியின் அமைதி மற்றும் தன்னம்பிக்கையை தான் எப்போதும் ரசிக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் புகழ்ந்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குள் நுழைய
 

தோனியின் அமைதி மற்றும் தன்னம்பிக்கையை தான் எப்போதும் ரசிக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் புகழ்ந்துள்ளார். 

தோனியின் அமைதி மற்றும் தன்னம்பிக்கையை தான் எப்போதும் ரசிக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் புகழ்ந்துள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.  இந்நிலையில் உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குள் நுழைய 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

நேற்றைய போட்டி, உலகக்கோப்பையில் தோனியின் கடைசி ஆட்டமாக அமையும் என கணிக்கப்படும் நிலையில், தோனிக்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில், “நேற்றைய  போட்டியில் வழக்கமான அதிரடியை வெளிப்படுத்த இயலவில்லை எனினும், தன் முழு பங்களிப்பையும் அளித்த தோனிக்கு நன்றி, இனி நீங்கள் தொடர்ந்து விளையாடுவீர்களா என்பது உறுதியாக தெரியவில்லை. நேற்றைய  போட்டியில் வழக்கமான அதிரடியை வெளிப்படுத்த இயலவில்லை. ஆனால் உங்களுடைய அமைதி மற்றும் தன்னம்பிக்கையை எப்போதும் ரசிக்கிறேன். இதுவரை நீங்கள் எங்களுக்கு கொடுத்த இவ்வளவு விளையாட்டுக்கும், நினைவுகளுக்கும் நன்றி. உங்களது அமைதியையும், தன்நம்பிக்கையையும் நான் எப்போதும் போற்றுவேன்” என பதிவிட்டுள்ளார்.