×

தோனி அவ்வளவு வொர்த் கிடையாது; வம்புக்கு இழுக்கும் கவுதம் கம்பீர் !!

தோனி மட்டும் தான் இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்று கூறுவது சரியானது அல்ல என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். தோனி மட்டும் தான் இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்று கூறுவது சரியானது அல்ல என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஐ.சி.சி.,யால் நடத்தப்படும் மூன்று விதமான கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்று கொடுத்த ஒரே ஒரு சாதனை நாயகனாக தோனி இருந்தாலும், நீ எல்லாம் ஒரு ஆளா என்று அவரையும்
 

தோனி மட்டும் தான் இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்று கூறுவது சரியானது அல்ல என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

தோனி மட்டும் தான் இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்று கூறுவது சரியானது அல்ல என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

ஐ.சி.சி.,யால் நடத்தப்படும் மூன்று விதமான கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்று கொடுத்த ஒரே ஒரு சாதனை நாயகனாக தோனி இருந்தாலும், நீ எல்லாம் ஒரு ஆளா என்று அவரையும் சில முன்னாள் வீரர்கள் விமர்ச்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர், அதில் கவுதம் கம்பீர் தான் முதன்மையானவர் என்றால் அது மிகையாகாது. 
தோனியை விமர்சிப்பதையே பல வருடங்களாக தனது வாடிக்கையாக வைத்து வரும் கவுதம் கம்பீர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தோனியை மீண்டும் சீண்டி பார்க்கும் வகையில் பேசியுள்ளார்.

தோனி குறித்து பேசிய கம்பீர், “புள்ளி விபரங்களை மட்டும் வைத்து கொண்டு தோனி தான் சிறந்த கேப்டன் என்று கூறிவிட முடியாது. அனில் கும்ப்ளே, கங்குலி, ராகுல் டிராவிட் மட்டும் தற்போதைய கேப்டனான விராட் கோஹ்லி உள்பட இந்திய அணிக்கு மிகச்சிறப்பான கேப்டன்கள் கிடைத்துள்ளனர். தோனி இரண்டு உலகக்கோப்பையையும் இந்த்ய அணிக்கு பெற்று கொடுத்துள்ளார் தான் ஆனால் அதனை மட்டும் வைத்து கொண்டு தோனி மட்டுமே மிகச்சிறந்த கேப்டன் என்று கூறுவது சரியல்ல, வெற்றியும், தோல்வியும் கேப்டனை மட்டுமே சாராது அது ஒட்டுமொத்த அணிக்குமானது” என்றார்.