×

டிரிபிள் செஞ்சுரி இருந்தும்.. அணியே முக்கியம்.. தன்னலமற்ற கேப்டனுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

கேப்டன் விராட் கோலி 300 ரன்களை அடிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும் அதைச் செய்யாமல் அணியின் வெற்றிக்காக டிக்ளேர் செய்தார். இதனால், சுயநலமற்ற கேப்டன் என இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து. கேப்டன் விராட் கோலி 300 ரன்களை அடிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும் அதைச் செய்யாமல் அணியின் வெற்றிக்காக டிக்ளேர் செய்தார். இதனால், சுயநலமற்ற கேப்டன் என இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்
 

கேப்டன் விராட் கோலி 300 ரன்களை அடிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும் அதைச் செய்யாமல் அணியின் வெற்றிக்காக டிக்ளேர் செய்தார். இதனால், சுயநலமற்ற கேப்டன் என இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து.

கேப்டன் விராட் கோலி 300 ரன்களை அடிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும் அதைச் செய்யாமல் அணியின் வெற்றிக்காக டிக்ளேர் செய்தார். இதனால், சுயநலமற்ற கேப்டன் என இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. மிகச் சிறப்பாக ஆடிய துவக்க வீரர் மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். புஜாரா மற்றும் ரஹானே இருவரும் அரைசதம் கண்டு ஆட்டமிழந்தனர். 

மற்றொரு பக்கம் நங்கூரம் போல்  நிலைத்து ஆடி வந்த கேப்டன் விராட் கோலி டெஸ்ட் அரங்கில் தனது ஏழாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இவருக்கு பக்கபலமாக இருந்த ஜடேஜா அரைசதம் கண்டார். இரட்டை சதம் அடித்த பிறகு, கோலி மற்றும் ஜடேஜா இருவரும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்யத் துவங்கினர். 

இரண்டாம் நாள் ஆட்டத்தில் மீதம் 30 ஓவர்கள் இருக்கையில், இவர்கள் இருவரும் 10 ஓவர்களுக்கு 91 ரன்கள் அடித்து சிறிது நேரம் டி20 போட்டி போலவே ஆட்டத்தை எடுத்துச் சென்றனர். ஜடேஜா சதம் அடிக்கும் வரை ரெகுலர் செய்யாமல் விராட் கோலி காத்திருந்தார். ஆனால், இவர் டெஸ்ட் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோர் 243 ரன்களை கடந்து, 250 ரன்கள் அடித்தார். 

இந்நிலையில் முதன்முதலாக டெஸ்ட் அரங்கில் முச்சதம் அடிப்பார் என அனைத்து ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. சதம் அடிக்கும் தருவாயில் இருந்த ஜடேஜா, 91 ரன்கள் அடித்து இருக்கையில் துரதிஸ்டவசமாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த கணமே தனது முதல் முச்சதம் பற்றி சற்றும் நினைக்காமல் முதல் இன்னிங்க்சை டிக்ளேர் செய்து தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய பணித்தார் கோலி. 

இதனால் தனது சொந்த சாதனைகளைப் பற்றி சற்றும் யோசிக்காமல் அணியின் வெற்றிக்காக விராட் கோலி பாடுபட்டு வருகிறார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இவரை போற்றிப் புகழத் தொடங்கினர்.

-vicky