×

டிஎன்பிஎல்- திருப்பூர் Tamizhans vs மதுரை Panthers

நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 20 போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மதுரை அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் கணிசமான பங்களிப்பை தந்தனர். பிரவீன் குமார் 35 ரன்களும், சீதாராம் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிகட்டத்தில் கௌசிக் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார், சட்டர்வே தன்
 

நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 20 போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மதுரை அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் கணிசமான பங்களிப்பை தந்தனர். பிரவீன் குமார் 35 ரன்களும், சீதாராம் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிகட்டத்தில் கௌசிக் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார், சட்டர்வே தன் பங்கிற்கு 41 ரன்கள் சேர்த்து இறுதிவரை களத்தில் நின்றார். 20 ஓவர் முடிவில் மதுரை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது. திருப்பூர் அணி தரப்பில் கருப்புசாமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

185 என்ற கடின இலக்கை துரத்திய திருப்பூர் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சியாக அமைந்தது. திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டு போல வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.
திருப்பூர் அணியின் ராஜ்குமார், மான் பப்னா மற்றும் துசார் ரஹாஜா ஆகியோர் மட்டும் இரட்டை இலக்க ரன்களை எட்டினர் மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.17.4 ஓவர் முடிவில் திருப்பூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மதுரை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் மதுரை அணி பதிவு செய்யும் இரண்டாவது வெற்றி இதுவாகும்.