×

கிரிக்கெட்டில் மட்டுமல்ல.. இதிலும் கோஹ்லி தான் டாப்!!

சமூகவலைதளங்களில் 100 மில்லியன் நபர்களுக்கு மேல் பின் தொடரப்படும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். சமூகவலைதளங்களில் 100 மில்லியன் நபர்களுக்கு மேல் பின் தொடரப்படும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், யார் வெற்றி பெறுவார்? எந்த வீரர் மிகச் சிறப்பாக செயல்படுவார்? பந்துவீச்சில்
 

சமூகவலைதளங்களில் 100 மில்லியன் நபர்களுக்கு மேல் பின் தொடரப்படும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

சமூகவலைதளங்களில் 100 மில்லியன் நபர்களுக்கு மேல் பின் தொடரப்படும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், யார் வெற்றி பெறுவார்? எந்த வீரர் மிகச் சிறப்பாக செயல்படுவார்? பந்துவீச்சில் அசத்தப் போவது யார்? என பல பக்கங்களில் இருந்தும் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் என அனைவரும் தங்கள் கருத்துக்களையும் கணிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

இதில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒருவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. ஏனெனில் கடந்த ஆறு ஏழு வருடங்களாக இந்திய அணிக்கு இவரின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. அதே போல் ஒரு நாள் அரங்கில் சச்சினின் சாதனையை முறியடிக்க இவர் ஒருவரால் மட்டுமே முடியும் எனவும் அனைவராலும் எண்ணப்படுகிறது.

அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஒருநாள் அரங்கில் தனது 42 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். ஒருநாள் அரங்கில் 40க்கும் மேற்பட்ட சதங்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பாக 49 சதங்களுடன் சச்சின் முதல் இடத்தில் இருக்கிறார். மேலும், ஒருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 10 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி தன்வசம் கொண்டுள்ளார். இவ்வாறு பேட்டிங்கில் பலர் படைத்த சாதனைகளை இவர் மாற்றி அமைத்து வருவதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் அழகிலும் இவர் படு ஸ்மார்ட்; ஆகவே பெண் ரசிகர்களும் இவருக்கு ஏராளம்.

இவர் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ். அவ்வப்போது தனது புகைப்படங்களையும், தான் செய்யும் வேலைகளை வீடியோ வாயிலாகவும் எடுத்து வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப் படுத்திக் கொண்டே இருப்பார். இதனால் இவரை பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். 

இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 33.6 மில்லியன் ஃபாலோயர்களும், ட்விட்டர் பக்கத்தில் 29.5 மில்லியன் ஃபாலோயர்களும், மேலும் பேஸ்புக் பக்கத்தில் சுமார் 37 மில்லியன் ஃபாலோயர்களும் என 100 மில்லியன் ஃபாலோயர்களுக்கும் மேல் இவர் கொண்டுள்ளார்.

இதன் மூலம் சமூக வலைதளங்களில் 100 மில்லியன் ஃபாலோயர்களுக்கும் மேல் கொண்டுள்ள முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தற்போது பெற்றுள்ளார்.