×

வங்கதேசத்தை பந்தாடியது இங்கிலாந்து

வெற்றிபெற 387 என்ற இமாலய இலக்கே வங்கதேச துவக்க ஆட்டக்காரர்களை மலைக்க செய்திருக்கும்போல. இக்பால் 19 ரன்களுக்கும் சர்க்கார் இரண்டு ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஷாகிப் அல் ஹசன் தூள்பறத்தினார். அவருக்கு ஓரளவு நல்ல துணையாய் இருந்த ரஹிம் 44 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த மிதுன் டக் அவுட் ஆகவும், வங்கதேசத்தின் வெற்றிவாய்ப்பு பெரிதும் மங்கியது. உலககோப்பையில் தங்களது மூன்றாவது ஆட்டத்தில் இன்று இங்கிலாந்தும் வங்கதேச அணிகளும் மோதின. ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றி
 

வெற்றிபெற 387 என்ற இமாலய இலக்கே வ‌ங்கதேச துவக்க ஆட்டக்காரர்களை மலைக்க செய்திருக்கும்போல. இக்பால் 19 ரன்களுக்கும் சர்க்கார் இரண்டு ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஷாகிப் அல் ஹசன் தூள்பறத்தினார். அவருக்கு ஓரளவு நல்ல துணையாய் இருந்த ரஹிம் 44 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த மிதுன் டக் அவுட் ஆகவும், வ‌ங்கதேசத்தின் வெற்றிவாய்ப்பு பெரிதும் மங்கியது.

உலககோப்பையில் தங்களது மூன்றாவது ஆட்டத்தில் இன்று இங்கிலாந்தும் வ‌ங்கதேச அணிகளும் மோதின. ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றி ஒரு தோல்வி என இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளன. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ராய் மற்றும் பேர்ஸ்டோ இருவரும் முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தனர். பேர்ஸ்டோ 51, ரூட் 21, பட்லர் 64 என ஒருபக்கம் அவரவர் தங்கள் பங்குக்கு ரன்கள் குவிக்க, ராய் பிரமாதமாக ஆடி 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 386 என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது. வ‌ங்கதேச அணி சார்பில் சைஃபுதீன் மற்றும் மிராஸ் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் குவித்த ஏழாவது ஆட்டம் இது.

வெற்றிபெற 387 என்ற இமாலய இலக்கே வ‌ங்கதேச துவக்க ஆட்டக்காரர்களை மலைக்க செய்திருக்கும்போல. இக்பால் 19 ரன்களுக்கும் சர்க்கார் இரண்டு ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஷாகிப் அல் ஹசன் தூள்பறத்தினார். அவருக்கு ஓரளவு நல்ல துணையாய் இருந்த ரஹிம் 44 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த மிதுன் டக் அவுட் ஆகவும், வ‌ங்கதேசத்தின் வெற்றிவாய்ப்பு பெரிதும் மங்கியது. ஆனாலும் சளைக்காமல் ஆடிய ஷாகிப் அல் ஹசன் சதம் கடந்து, 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தோல்வி உறுதி என்று தெரிந்தபின், நெட்ரேட் விகித வித்தியாசத்தைக் குறைக்கவேண்டி, வ‌ங்கதேச அணியினர் குறியாய் இருந்தனர். இறுதியில் வங்கதேசம் 49ஆவது ஓவரில் 280 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆர்ச்சர் வெகு சிக்கனமாக பந்துவீசி  3 விக்கெட்களையும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இங்கிலாந்து 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.