×

’மிஸ் யூ வாட்சன்’ சொல்வது ரசிகர்கள் மட்டுமல்ல… ஐபிஎல்-ம்தான்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்தவர் ஷேன் வாட்சன். ஒருநாள் போட்டிகளில் 9 சதங்கள், 33 அரை சதங்களோடு 5757 ரன்கள் குவித்தவர். டி20 போட்டிகளில் 58 ஆட்டங்களில் ஆடி 1452 ரன்கள் விளாசியவர். பவுலிங்கிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செலுத்தியவர். 2016 ஆம் ஆண்டு அவர் ஓய்வை அறிவித்தார். ஆயினும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ஆடினார். ஐபிஎல் போட்டிகளில் மகத்தான பங்களிப்பு செய்தவர் ஷேன் வாட்சன். 145 ஐபிஎல் போட்டிகளில் ஆடிய வாட்சன், 4 சதங்கல், 21
 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்தவர் ஷேன் வாட்சன். ஒருநாள் போட்டிகளில் 9 சதங்கள், 33 அரை சதங்களோடு 5757 ரன்கள் குவித்தவர். டி20 போட்டிகளில் 58 ஆட்டங்களில் ஆடி 1452 ரன்கள் விளாசியவர். பவுலிங்கிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செலுத்தியவர். 2016 ஆம் ஆண்டு அவர் ஓய்வை அறிவித்தார். ஆயினும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ஆடினார்.

ஐபிஎல் போட்டிகளில் மகத்தான பங்களிப்பு செய்தவர் ஷேன் வாட்சன். 145 ஐபிஎல் போட்டிகளில் ஆடிய வாட்சன், 4 சதங்கல், 21 அரை சதங்களோடு 3874 ரன்களைக் குவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளில் முதலில் வாட்சன் இடம்பிடித்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ். ஷேன் வார்னே தலைமையிலான அந்த அணியே முதல் ஐபிஎல் கோப்பையைச் சொந்தமாக்கிக் கொண்டது. அதற்கு முக்கியக் காரணம் வாட்சன்தான். அந்த சீசனின் தொடர்நாயகன் விருதும் வாட்சனுக்கே.

2018 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார் வாட்சன். அந்த சீசனில் செம ஃபார்மில் இருந்தார் வாட்சன். அதுவும் இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணி 178 ரன்கள் எடுக்க, ஓப்பனிங் இறங்கிய வாட்சன் 57 பந்துகளில் 117 ரன்களை விளாசினார். அதில் 8 சிக்ஸர்களும் 11 பவுண்ட்ரிகளும் அடங்கும். அதுவே சென்னையை எளிதாக வெற்றிபெற வைத்து அந்த சீசனின் கோப்பையை வெல்ல வைத்தது. 2019 ஆம் ஆண்டில் காலில் ரத்தம் வழிய வழிய அவர் ஆடியதை மறக்கவே முடியாது.

இந்த சீசனில் ஷேன் வாட்சன் ஃபுல் ஃபார்மில் இல்லை என்பதே வெளிப்படையான உண்மை. அதனால், முதல் நான்கைந்து போட்டிகளில் திணறினார். பின் ஓரிரு போட்டிகளில் நன்கு விளையாடினார். அதற்கு அடுத்து அவர் இடத்தை ருத்ராஜ் கெய்க்வாட்க்குக் கொடுக்கப்பட்டதும், அவர் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அது உண்மையெனில், கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல், ஐபிஎல்லே வாட்சனை மிஸ் பண்ணும்.

சென்னை ரசிகர்கள் ‘missyouwatson’ என ஹேஷ்டேக் மூலம் வாட்சனின் சாதனைகளைப் பகிர்ந்துவருகிறார்கள்.