×

பிரபல கிரிக்கெட் வீரரின் “அந்த” விளக்கம்!  ரசிகைகள் மகிழ்ச்சி!

தன் மீது ஓரினச்சேர்க்கையாளன் என்று வைக்கப்படும் விமர்சனம் தவறு என்று ஆஸ்திரேலியகிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் பாக்னர் விளக்கம் அளித்திருக்கிறார் தன் மீது ஓரினச்சேர்க்கையாளன் என்று வைக்கப்படும் விமர்சனம் தவறு என்று ஆஸ்திரேலியகிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் பாக்னர் விளக்கம் அளித்திருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஜேம்ஸ் பாக்னர் மிகவும் பிரபலமானவர். இவர்,தனது 29 வது பிறந்த நாளை தனது தாய் மற்றும் நண்பர்களுடன் கடந்த சனிக்கிழமை கொண்டாடினார். கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை
 

தன் மீது ஓரினச்சேர்க்கையாளன் என்று வைக்கப்படும் விமர்சனம் தவறு என்று  ஆஸ்திரேலியகிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் பாக்னர் விளக்கம் அளித்திருக்கிறார்

தன் மீது ஓரினச்சேர்க்கையாளன் என்று வைக்கப்படும் விமர்சனம் தவறு என்று ஆஸ்திரேலியகிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் பாக்னர் விளக்கம் அளித்திருக்கிறார்.
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஜேம்ஸ் பாக்னர் மிகவும் பிரபலமானவர். இவர்,தனது 29 வது பிறந்த நாளை தனது தாய் மற்றும் நண்பர்களுடன் கடந்த சனிக்கிழமை கொண்டாடினார். கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் ஒரு படத்தில் தனது தாய் மற்றும் நண்பருடன் இருக்கிறார். அதில் “நானும் எனது ஆண் நண்பனும் (boy friend)” என்று குறிப்பிட்டிருந்தார்.


 
இதையடுத்து, “பொதுவாக ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள்தான், ஆண் நண்பர்களுடன் இருக்கும் படங்களில் “ஆண் நண்பர்கள்” என்று குறிப்பிட்டுச் சொல்வார்கள். மற்றவர்கள், “நண்பர்களுடன் நான்..” என்றுதான் சொல்வார்கள். ஆகவே ஜேம்ஸ் பாக்னர் தன்பாலின ஈர்ப்பாளர் (ஓரினச்சேர்க்கையாளர்)” என்ற யூகம் பரவியது. ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று, “ஜேம்ஸ் பாக்னர், தனது ஆண் நண்பருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்” என்றும் செய்தி வெளியிட்டது.
 
இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரம், “அவரது வாழ்க்கையை அவரவரே தீர்மானிக்க வேண்டும். ஜேம்ஸ் பாக்னரின் தனிப்பட்ட வாழ்க்கையை எவரும் விமர்சிப்பது சரியல்ல” என்றும் பலர் சமூகவலைதளங்களில் எழுதினர்.


 
இந்நிலையில் ஜேம்ஸ் பாக்னர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர், “நான் ஓரினச் சேர்க்கையாளன் இல்லை.  குறிப்பிட்ட அந்த படத்தில் இருப்பது எனது நெருங்கிய நண்பர். அந்தப் படத்தில் நான் “பாய்  பிரண்ட்”  என்று குறிப்பிட்டது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். மேலும், பாய் பிரண்ட் என்பதை பெஸ்ட் பிரண்ட் என்றும் மாற்றியுள்ளார்.
 
 இந்த நிலையில் “ஜேம்ஸ் பாக்னர் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று ரசிகைகள் பலர் சமூகவலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.