×

தோனியா ? கோலியா ? ; நாளை கலக்கலாகத் தொடங்கும் ஐபிஎல் – வெற்றி வாய்ப்பு யாருக்கு ?

கிரிக்கெட் போட்டி என்பதை விட ஐபிஎல் திருவிழா என்பதே பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு ஐபிஎல் போட்டிகளைக் கொண்டாடுகின்றனர் ரசிகர்கள் 2008 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள். கிரிக்கெட் போட்டி என்பதை விட ஐபிஎல் திருவிழா என்பதே பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு ஐபிஎல் போட்டிகளைக் கொண்டாடுகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் 12 – வது சீசன் ஐபிஎல் போட்டிகள் நாளை மாலை சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்குகின்றன. சென்னை சேப்பாக்கம்
 

கிரிக்கெட் போட்டி என்பதை விட ஐபிஎல் திருவிழா என்பதே பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு ஐபிஎல் போட்டிகளைக் கொண்டாடுகின்றனர் ரசிகர்கள்

2008 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள். கிரிக்கெட் போட்டி என்பதை விட ஐபிஎல் திருவிழா என்பதே பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு ஐபிஎல் போட்டிகளைக் கொண்டாடுகின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் 12 – வது சீசன் ஐபிஎல் போட்டிகள் நாளை மாலை சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்குகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலத் துவக்க விழாவுடன் துவங்க இருக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சந்தேகமே இல்லாமல் நாளை நடைபெற இருக்கும் முதல் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பலத்த எதிர்பார்ப்பையும் பெற இருக்கிறது. ஒரு பக்கம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருக்கும், கேப்டன் கூல் என்றும், தல என்றும் அனைவராலும் கொண்டாடப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மற்றொரு பக்கம் தன் ஆக்ரோஷமான அணுகுமுறையாலும், அதிரடி ஆட்டத்தாலும், ஏராளமான இளைஞர்களைக் கவர்ந்து இந்தியாவின் இளவரசராக வலம் வந்து கொண்டிருக்கும் கோலி. இதில் இந்த முறை கண்டிப்பாக கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்றும் ” ஈ சாலா கப் நமதே” என்னும் குறிக்கோளுடன் களமிறங்கியிருக்கிறது கோலியின் பெங்களூர் அணி. 

உத்தேச ஆடும் லெவன் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 

மொய்ன் அலி – அதிரடி ஆட்டக்காரர்

பார்த்தீவ் பட்டேல் – அதிரடி ஆட்டக்காரர், விக்கெட் கீப்பர்

விராட் கோஹ்லி (கேப்டன்) – அதிரடி ஆட்டக்காரர் 

ஏ.பி டிவில்லியர்ஸ் – அதிரடி ஆட்டக்காரர் 

சிம்ரன் ஹெய்ட்மர் – அதிரடி ஆட்டக்காரர் (மிடில் ஆர்டர்)

சிவம் துபே – ஆல் ரவுண்டர்

வாசிங்டன் சுந்தர்- ஆல் ரவுண்டர்

டிம் சவுத்தி – சீனியர் வேகப்பந்து வீச்சாளர் 

உமேஷ் யாதவ் – நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் 

சாஹல்-சுழற்பந்து வீச்சாளர்

முகமது சிராஜ் – வேகப்பந்து வீச்சாளர்  

 

உத்தேச ஆடும் லெவன் – சென்னை சூப்பர் கிங்ஸ் 

சேன் வாட்சன் – துவக்க வீரர், அதிரடி ஆட்டக்காரர் 
 
அம்பத்தி ராயூடு – துவக்க வீரர், அதிரடி ஆட்டக்காரர் 

சுரேஷ் ரெய்னா – அதிரடி ஆட்டக்காரர் 

தோனி – கேப்டன், விக்கெட் கீப்பர், அதிரடி ஆட்டக்காரர் 

கேதர் ஜாதவ் – ஆல் ரவுண்டர் 

டேவிட் வில்லே – ஆல் ரவுண்டர் 

டூவைன் பிராவோ – ஆல் ரவுண்டர் 

ஜடேஜா – ஆல் ரவுண்டர் 

தீபக் சாஹர் –  வேகப்பந்து வீச்சாளர் 

மிட்செல் சாட்னர் – வேகப்பந்து வீச்சாளர் 

ஷர்துல் தாகூர் – வேகப்பந்து வீச்சாளர் 

 

வெற்றி வாய்ப்பு யாருக்கு ?

நாளை முதல் போட்டி விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சென்னை அணி எப்போதும் போல ஒரு தெளிவான திட்டத்துடன் தான் செயல்படும். ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிளெமிங் மற்றும் கேப்டன் தோனி இருவருக்குமான புரிதல் அபாரமானது. அணி தேர்விலிருந்து, வியூகங்கள் வரை சென்னை அணி வெற்றி பெறுவதற்கு இவர்கள் இருவருக்கும் இருக்கும் புரிதலும், தலைமைக்கு கட்டுப்படும் சென்னை அணி வீரர்களுமே காரணம் ஆகும். சென்னை அணியில் அனைவருமே தேர்ந்த வீரர்கள் என்று சொல்ல முடியாது. பார்மில் இல்லாத வீரர்களும் இருக்கிறார்கள். ஆனால், ஒரு போட்டியில் யாரேனும் ஒருவர் வெறித்தனமாக ஆடி வெற்றிக்கு வழி செய்வார். இதனால் எந்த ஒரு தனி வீரரையும் நம்பி சென்னை அணி இல்லை என்பது ஆரோக்யமான விஷயமே.

பெங்களூரு அணி பெரும்பாலும் கோலி மற்றும் டி வில்லியர்ஸை மட்டுமே நம்பியிருக்கிறது. அணியின் பின்னடைவிற்கு இது முக்கியக் காரணம் என்று சொல்லலாம். இன்னும் ஒரு முறை கூட கோப்பையை பெறவில்லை என்ற அழுத்தம் கண்டிப்பாக இந்த முறை பெங்களூரு அணியை பாதிக்கும். அது நேர்மறையாக செயலாற்றுமா இல்லை பதட்டத்தில் கோட்டை விடுவார்களா என்று போக போகத் தான் தெரியும். இந்நிலையில் கடந்த கால வரலாறும் ஒன்றும் பெங்களூரு அணிக்கு சாதகமாக இல்லை.

ராசியில்லாத பெங்களூரு அணி 

சென்னை – பெங்களூர் அணிகள் இதுவரை மோதிய 22 போட்டிகளில், 14 முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. பெங்களூர் அணி 7 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அது மட்டுமில்லாமல், கடந்த ஆறு முறை சென்னை அணியுடனான போட்டிகளில் பெங்களூர் தோல்வி அடைந்துள்ளது. 2014 – ஆம் ஆண்டில் தான் கடைசியாக சென்னை அணியை பெங்களூர் அணி வீழ்த்தி இருக்கிறது.

மேலும், கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி இரு முறையும் பெங்களூர் அணியை தோற்கடித்து இருந்தது. கடந்த ஆண்டு, ஒரு போட்டியில் 200 – க்கும் அதிகமாக ரன் குவித்து, சென்னையிடம், பெங்களூர் அணி தோல்வி அடைந்தது.

ஆக மொத்தத்தில், பெங்களூர் அணிக்கு, சென்னை அணிக்கு எதிரான போட்டிகளில் சுத்தமாக ராசியில்லை. ஆனால், வரலாறெல்லாம் முக்கியமில்லை. களத்தில் ஆடுவது தான் முக்கியம். அதுமட்டுமின்றி, முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இரண்டு வருடம் தடை நீங்கி சென்ற வருடம் திரும்பிய சென்னை அணி ஒரே போட்டியை மட்டுமே சொந்த மைதானத்தில் ஆடியது. இதனால் சென்னை அணியும்  நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கும்.

எனவே இந்த சீசனில் கோலியின் அணி வெற்றிப் பாதையில் பயணிக்குமா? இல்லை மீண்டும் ஒரு மோசமான ஐபிஎல் தொடரை எதிர்கொள்ளுமா? என்பதை நாளை முதல் போட்டியில் பார்க்கலாம்.