×

இந்தியா அபார வெற்றி! டி20 தொடரை கைப்பற்றியது

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்
 

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய துவக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அரைசதம் கடந்த பிறகு அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 

ஷிகர் தவான் 36 பந்துகளில் 52  ரன்கள் எடுத்து வெளியேறினார். கேஎல் ராகுல் 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த பிறகு ஆட்டம் இழந்தார். மனிஷ் பாண்டே 18 பந்துகளில் 31 ரன்களும், தாக்கூர் 8 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெடுகளை இழந்து இந்திய அணி 201 ரன்கள் எடுத்திருந்தது. 

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அடுத்து வந்த இரண்டு வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால், இலங்கை அணி மிகவும் தடுமாற்றம் கண்டது. 

இலங்கை அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்ததால் 100 ரன்களுக்கு சுருண்டு விடும் என எதிர்பார்க்கப்பட்ட போது, தனஞ்செயா மற்றும் அனுபவ வீரர் மேதியூஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 

அதிரடியாக ஆடிய மேதியூஸ் 31 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் சிறப்பாக ஆடிய தனஞ்செயா 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க 15.5 ஓவர்களில் 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.