×

‘1983’ உலகக்கோப்பையை கைப்பற்றிய சாம்பியன் வீரர் மறைந்தார்!

1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யஷ்பால் ஷர்மா இன்று மறைந்தார். 66 வயதான அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் டெல்லியில் உயிரிழந்தார். உலகக்கோப்பையை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியின் மிக முக்கிய பேட்ஸ்மேனாக இருந்தவர் யஷ்பால். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான பொறுப்புடன் ஆடி அவர் உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்ததில் முக்கிய பங்காற்றிருந்தார். இவரின் கிரிக்கெட் வாழ்க்கை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டியவை. 1954ஆம் ஆண்டு
 

1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யஷ்பால் ஷர்மா இன்று மறைந்தார். 66 வயதான அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் டெல்லியில் உயிரிழந்தார். உலகக்கோப்பையை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியின் மிக முக்கிய பேட்ஸ்மேனாக இருந்தவர் யஷ்பால். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான பொறுப்புடன் ஆடி அவர் உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்ததில் முக்கிய பங்காற்றிருந்தார்.

இவரின் கிரிக்கெட் வாழ்க்கை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டியவை. 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி லூதியானாவில் இவர் பிறந்தார். இவருக்கு ரேனு என்ற மனைவியும், பூஜா, ப்ரீத்தி என்ற இரு மகள்களும் சிராக் என்ற ஒரு மகனும் உள்ளனர். 1979ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இவர் அறிமுகமானார். 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ல இவர் 2 சதம், 9 அரைசதம் உட்பட 1,606 ரன்கள் எடுத்திருக்கிறார். அதேபோல 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 883 ரன்கள் எடுத்துள்ளார்.

1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் அவர் அடித்த அரைசதம் தான் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 1983இல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியை சிறப்பிக்கும் வகையில் ’83’ என்ற படத்தில் இவர் குறித்த காட்சிகளும் இடம்பெறவிருக்கின்றன. இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மகளிர் கிரிக்கெட் போட்டிகளின்போது அம்பயராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாம் சர்வதேச போட்டிகளுக்காக இந்திய வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.

2003-06, 2008 ஆகிய ஆண்டுகளில் இவர் தேர்வுக்குழுவில் இருந்தார். ராஞ்சி தொடரில் பங்கேற்கும் உத்தரப் பிரதேச அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவ்வாறு பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு கிரிக்கெட்டில் சாதித்த லெஜெண்ட் மறைந்திருப்பது கிரிக்கெட் உலகிற்கு பேரிழப்பாகும். அனைத்து கிரிக்கெட் வீரர்களும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.