×

மகளிர் கிரிக்கெட் உலககோப்பை எப்போது… தேதி அறிவிப்பு!

மகளிர் கிரிக்கெட்டுக்கான உலககோப்பை 2009 ஆம் ஆண்டிலிருந்து ஐசிசியால் நடத்தப்படுகிறது. முதல் உலககோப்பையை இங்கிலாந்து தட்டிச் சென்றது. இரண்டு, மூன்று, நான்கு, ஆறு, ஏழு ஆகிய ஐந்து கோப்பைகளை வென்றது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிதான். ஐந்தாம் கோப்பையை வென்றது வெஸ்ட் இண்டிஸ். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சென்ற முறைதான் இறுதிப்போட்டிக்குச் சென்றது. ஆனால், படு தோல்வியைச் சந்தித்தது. அடுத்ததாக 2021 ஆம் ஆண்டில் உலககோப்பையை நடத்த திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கொரோனா அச்சத்தினால் அது ஒத்தி
 

மகளிர் கிரிக்கெட்டுக்கான உலககோப்பை 2009 ஆம் ஆண்டிலிருந்து ஐசிசியால் நடத்தப்படுகிறது. முதல் உலககோப்பையை இங்கிலாந்து தட்டிச் சென்றது.

இரண்டு, மூன்று, நான்கு, ஆறு, ஏழு ஆகிய ஐந்து கோப்பைகளை வென்றது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிதான். ஐந்தாம் கோப்பையை வென்றது வெஸ்ட் இண்டிஸ். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சென்ற முறைதான் இறுதிப்போட்டிக்குச் சென்றது. ஆனால், படு தோல்வியைச் சந்தித்தது.

அடுத்ததாக 2021 ஆம் ஆண்டில் உலககோப்பையை நடத்த திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கொரோனா அச்சத்தினால் அது ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது அடுத்த ஒருநாள் மகளிர் உலகோப்பை எப்போது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய ஐந்து அணிகள் உலககோப்பையில் விளையாட தகுதி பெற்றுவிட்டன. மீதம் 3 அணிகள் இனி நடைபெறும் தகுதிச் சுற்றில் விளையாடி வென்று தகுதி பெற வேண்டும்.

இந்திய அணி ஆடும் முதல் போட்டி மார்ச் 4 -ம் தேதி நடைபெறுகிறது. உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஏப்ரல் 3 -ம் தேதி எனத் திட்டிமிட்டிருக்கிறார்கள்.