×

தமிழ்நாடு அணியிலிருந்து நடராஜன் விடுவிப்பு… காரணம் என்ன?

கடந்த ஐபிஎல் சீசன் மூலம்நடராஜன் மீது பிசிசிஐயின் கண்பட்டது. சிறப்பாகப் பந்துவீசி ஜாம்பாவான் வீரர்களை அவுட்டாக்கி யார்க்கர் கிங் என பெயர் பெற்றார். இதனால் அவர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நெட் பவுலராகச் சென்றார். முதல் இரு ஒருநாள் தொடர்களில் இந்தியா தோற்ற பின், அடுத்த போட்டியில் நடராஜன் களமிறக்கப்பட்டார். அவரின் சிறப்பான பந்துவீச்சால் தொடரை இழந்தாலும், அப்போட்டியை வென்றது இந்தியா. இதனால் டி20 போட்டிகளில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கட்டுக்கோப்பான பந்துவீச்சின் காரணமாக டி20 தொடரை
 

கடந்த ஐபிஎல் சீசன் மூலம்நடராஜன் மீது பிசிசிஐயின் கண்பட்டது. சிறப்பாகப் பந்துவீசி ஜாம்பாவான் வீரர்களை அவுட்டாக்கி யார்க்கர் கிங் என பெயர் பெற்றார். இதனால் அவர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நெட் பவுலராகச் சென்றார். முதல் இரு ஒருநாள் தொடர்களில் இந்தியா தோற்ற பின், அடுத்த போட்டியில் நடராஜன் களமிறக்கப்பட்டார். அவரின் சிறப்பான பந்துவீச்சால் தொடரை இழந்தாலும், அப்போட்டியை வென்றது இந்தியா. இதனால் டி20 போட்டிகளில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கட்டுக்கோப்பான பந்துவீச்சின் காரணமாக டி20 தொடரை வெல்ல அவர் உறுதுணையாக இருந்தார். கேப்டன் கோலி அவரிடம் கோப்பையைக் கொடுத்து அழகு பார்த்தார்.

டெஸ்ட் போட்டிகளில் அவரால் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்த முடியாது என பல்வேறு தரப்பினரும் கூறிவந்த நிலையில், காயம் காரணமாக நிறைய வீரர்கள் விலகியதால் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். இதன்மூலம் நெட்பவுலராகச் சென்ற இந்தியர் ஒருவர் மூன்று தொடர்களிலும் அறிமுகமானவர் என்ற பெருமையைப் பெற்றார். டெஸ்ட்டிலும் தனது பங்களிப்பை நல்கினார். இச்சூழலில் இங்கிலாந்து அணிக்கெதிரான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. ஐபிஎஸ், ஆஸ்திரேலிய பயணம் என தொடர்ந்து பயோ பப்புளில் இருந்ததால் அவருக்கு பிசிசிஐ ஓய்வு வழங்கியதாகக் கூறப்பட்டது.

தற்போது விஜய் ஹசாரே தொடர் தொடங்கவிருப்பதால், தமிழக அணி சார்பாக நடராஜன் விளையாடுவார் என்று கூறப்பட்டது. அவர் இந்தத் தொடரில் விளையாடினால் இங்கிலாந்துடனான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அவரால் சரியாக விளையாட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கருத்தில்கொண்டு அவரை அணியிலிருந்து விடுவிக்குமாறு பிசிசிஐ தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தது. வேண்டுகோளை ஏற்று நடராஜன் விடுவிக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருக்கிறது.