×

டிக்கெட் விற்பனை பரபர… வீரரின் அப்பா மரணம் – india vs australia கிரிக்கெட் அப்டேட்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செல்ல புறப்பட்டு சென்றுவிட்டது. நவம்பர் 27 – லிருந்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் மோத இருக்கின்றன. இந்தப் போட்டிகளில் விளையாட தமிழக வீரர்கள் நடராஜன் தங்கராசு, ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிடன் சுந்தர் ஆகியோரு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். நவம்பர் 27, 29 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், டிசம்பர் 4, 6 மற்றும் 8 -ம் தேதிகளில் டி20 போட்டிகளும் நடக்க
 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செல்ல புறப்பட்டு சென்றுவிட்டது. நவம்பர் 27 – லிருந்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் மோத இருக்கின்றன.

இந்தப் போட்டிகளில் விளையாட தமிழக வீரர்கள் நடராஜன் தங்கராசு, ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிடன் சுந்தர் ஆகியோரு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நவம்பர் 27, 29 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், டிசம்பர் 4, 6 மற்றும் 8 -ம் தேதிகளில் டி20 போட்டிகளும் நடக்க விருக்கின்றன. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17-ம் தேதியும், இரண்டாம் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதியும், மூன்றாம் டெஸ்ட் போட்டி ஜனவரி 7-ம் தேதியும், நான்காம் டெஸ்ட் போட்டி ஜனவரி 15-ம் தேதியும் தொடங்குகிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகளைக் காண ஆவலோடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆம், இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 50 -75 சதவிகிதம் எனும் சில கட்டுப்பாடுகளும் உண்டு.

இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகளில் டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்றுத்தீர்ந்து விட்டன. போட்டியின் பரபரப்பு ஒருபக்கம், பல மாதங்களாக மைதானத்தில் நேரடியாக போட்டியைப் பார்க்க முடியாத ஏக்கம் ஒருபக்கம் என டிக்கெட் விற்பனை ஜெட் வேகத்தில் முடிக்க வைத்துவிட்டது.

இந்தப் போட்டிகளுக்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கும் பவுலர் முகம்மது சிராஜின் தந்தை இறந்தது பேரதிர்ச்சியை அவருக்கு அளித்துள்ளது. சிராஜின் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டிருந்த நிலையில் திடீரென்று இறந்துவிட்டார். ஆயினும் சிராஜ் ஆஸ்திரேலியாவிலிருந்து வர வில்லை என்று தெரிகிறது.

இன்னும் சில நாட்களில் ஆஸ்திரேலியா – இந்தியா போட்டிகள் தொடங்கி விடும். ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.