×

கண்டி அணியில் களம் இறங்கும் வெளிநாட்டு வீரர் இவர்தான் – இலங்கை LPL அப்டேட்

இலங்கையில் எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள், எட்டாண்டுகளாக நடத்தப்படுகிறது. ஐந்து அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்படுகிறது. இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நவம்பர் 26 -ம் தேதி தொடங்கும் எல்.பி.எல் தொடரில் டிசம்பர் 10-ம் தேதி வரை லீக் போட்டிகளும், டிசம்பர் 13 மற்றும் 14 -ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், டிசம்பர் 18-ம் தேதி
 

இலங்கையில் எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள், எட்டாண்டுகளாக நடத்தப்படுகிறது. ஐந்து அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்படுகிறது.

இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நவம்பர் 26 -ம் தேதி தொடங்கும் எல்.பி.எல் தொடரில் டிசம்பர் 10-ம் தேதி வரை லீக் போட்டிகளும், டிசம்பர் 13 மற்றும் 14 -ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், டிசம்பர் 18-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற விருக்கிறன.

இதில் கண்டி அணிக்கு சோதனை மேல் சோதனையாக வந்துகொண்டிருக்கிறது. அதன் கேப்டன் மலிங்கா இந்தத் தொடரிலிருந்து விலகினார். அவர் கேப்டனாக மட்டுமல்லாது, பவுலராகவும் எதிரணிணியை மிரட்டக்கூடியவர். அவர் இல்லாதது  அணிக்கு பேரிழப்பே. அதைத் தொடர்ந்து,அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் தனிப்பட்ட காரணங்களால் எல்.பி.எல் போட்டியிலிந்து விலகினார். அவர் கண்டி அணிக்காக விளையாட தேர்வாகியிருந்தார். அதேபோல, அதே அணியில் ஆட இருந்த பாகிஸ்தான் வீரர் சொஹைல் தன்வீருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவர் ஆடுவாரா என்பது சந்தேகம்தான்.

இந்நிலையில் கண்டி அணியை வலுப்படுத்த வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் வரவிருக்கிறார். தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர பவுலராகக் கலக்கியவர் டேல் ஸ்டெய்ன். அவர் இந்த எல்.பி.எல் சீசனில் கண்டி அணிக்காகக் களம் இறங்குகிறார்.

விரைவில் இலங்கை வரும் ஸ்டெயின் கொரோனா பாதுகாப்பு சோதனைகள் முடிந்து கண்டி அணிக்காக விக்கெட் வேட்டையாடுவார்.