×

2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சூதாட்டமா? – பூதாகரமாகும் விவகாரம்

கொழும்பு: 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நடந்த சூதாட்டம் காரணமாகவே இலங்கை அணி தோற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. 1983-ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. அப்போட்டியில் தோனி அடித்த சிக்சரும், அதைத் தொடர்ந்து இந்தியாவே அந்த வெற்றியை கொண்டாடிய தருணத்தையும் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இந்நிலையில், 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில்
 

கொழும்பு: 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நடந்த சூதாட்டம் காரணமாகவே இலங்கை அணி தோற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.

1983-ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. அப்போட்டியில் தோனி அடித்த சிக்சரும், அதைத் தொடர்ந்து இந்தியாவே அந்த வெற்றியை கொண்டாடிய தருணத்தையும் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இந்நிலையில், 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நடந்த சூதாட்டம் காரணமாகவே இலங்கை அணி தோற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனை அப்போது இலங்கை அரசின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்தா அலுத்கமகே கூறியுள்ளார்.

ஆனால் இலங்கை வீரர்கள் 11 பேரும் இதில் சம்மந்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மஹிந்தானந்தா அலுத்கமகேவின் கூற்றை முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சங்கக்காரா மற்றும் ஜெயவர்தனே உள்ளிட்டோர் மறுத்துள்ளனர். போதிய ஆதாரம் இல்லாமல் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை கூறக் கூடாது எனவும், இலங்கை வீரர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் சூதாட்டம் நடந்திருப்பதாக கூறுவது அடிப்படை இல்லாத கூற்று எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் டல்லஸ் அலாஹப்பெருமா இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.