×

’சின்ன தல’ ரெய்னாவுக்கு நோ எண்ட்ரியா? – CSK வாட்ஸ் அப் குழுவிலிருந்து நீக்கம்

இந்த ஐபிஎல் அறிவிப்புகள் தொடங்கியதும் அதிக செய்திகள் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றியே வந்திருக்கும். சென்னைக்கு ஜடேஜா பயிற்சிக்கு வராதது, வீரர்களுக்கு கொரோனா, ரெய்னா விலகியது, இன்று ஹர்பஜன் சிங் விலகியது என பரபரப்பான செய்திகளுக்கு மத்தியில் சிஎஸ்கே பயிற்சி எடுத்து வருகிறது. சென்னை ரசிகர்களுக்கு தோனி ‘தல’ என்றால், ’சின்ன தல’ சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கம் முதலே இருக்கும் வீரர் ரெய்னா. எப்போதும் ரெய்னாவை சிஎஸ்கேவும் விட்டுக்கொடுத்தது இல்லை. அதற்கு
 

இந்த ஐபிஎல் அறிவிப்புகள் தொடங்கியதும் அதிக செய்திகள் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றியே வந்திருக்கும். சென்னைக்கு ஜடேஜா பயிற்சிக்கு வராதது, வீரர்களுக்கு கொரோனா, ரெய்னா விலகியது, இன்று ஹர்பஜன் சிங் விலகியது என பரபரப்பான செய்திகளுக்கு மத்தியில் சிஎஸ்கே பயிற்சி எடுத்து வருகிறது.

சென்னை ரசிகர்களுக்கு தோனி ‘தல’ என்றால், ’சின்ன தல’ சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கம் முதலே இருக்கும் வீரர் ரெய்னா. எப்போதும் ரெய்னாவை சிஎஸ்கேவும் விட்டுக்கொடுத்தது இல்லை. அதற்கு ஏற்ப ஐபிஎல் என்றாலே  ரன் மிஷினாகி விடுவார் ரெய்னா.

சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே (2008-2015, 2018-2019) சுரேஷ் ரெய்னா 164 மேட்ச்களில் ஆடி, 4527 ரன்களைக் குவித்திருக்கிறார். 412 ஃபோர்களையும் 171 சிக்ஸர்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளாசியிருக்கிறார்.

இத்தனை சிறப்புகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகச் செய்திருக்கிறார் ரெய்னா. ஆனால், அவர் அணியிலிருந்து விலகியதற்கு காரணம், அவரின் குடும்பத்தினரை ஒரு கும்பல் படுகொலை செய்ததே என்று அவர் தனது ட்விட்டரில் தெளிவாக விளக்கியிருந்தார்.

ஆனாலும் பால்கனி வைத்த அறை ஒதுக்க வில்லை என்று தோனியுடன் சண்டை போன்ற செய்திகள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. அதேபோல அணியின் உரிமையாளர் சீனிவாசன்ம் ரெய்னா குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால், ரெய்னா தன் நிலையை விளக்கியது இறங்கி வந்தார். ரெய்னா என் பையனைப் போல என்றார்.

இதன் அடுத்தபடியாக, பயிற்சியாளர் ப்ளமிங் மூலம் ரெய்னா மீண்டும் அணிக்குள் வருவது தொடர்பாகப் பேசி வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதற்கு வாய்ப்பிருப்பது போல தெரியவில்லை.

ரெய்னாதான் சென்னை சூப்பர் கிங்ஸ் டீமின் துணை கேப்டன். அவர் இல்லையெனில் அடுத்த வைஸ் கேப்டன் யார் என்று சிஎஸ்கே அணியிடம் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்டதற்கு புத்திசாலி (வைஸ்) கேப்டன் இருக்கிறாரே என்றே மழுப்பலாகப் பதில் சொல்லப்பட்டிருக்கிறது. ரெய்னா வந்துவிடுவார் என்று மறைமுகமாகக்கூட சொல்ல வில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான வாட்ஸ் அப் குருப்பிலிருந்து சுரேஷ் ரெய்னாவை நீக்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியான தகவல்கள் மூலம் ரெய்னாவுக்கு நோ எண்ட்ரி என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னைக்காக ஆடினாலும் இந்த ஆண்டு நிச்சயம் ஆட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஏதேனும் மேஜிக் நடந்தால்தான் சின்ன தல யின் அதிரடி ஆட்டத்தை ரசிகர்கள் பார்க்க முடியும்.