×

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டீமில் நடராஜன் இல்லை – ஏன்?

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அற்புதமான சுற்றுப்பயணம் முடிவடைந்திருக்கிறது. ஒருநாள் தொடரையும் ஆஸ்திரேலியாவும், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை இந்தியாவும் வென்றன. இதை அடுத்து இந்த வருடம் முழுக்க இந்திய அணி விளையாட ஏராளமான போட்டிகள் காத்திருக்கின்றன. அடுத்த மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட விருக்கிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட விருக்கின்றன. பிப்ரவரி 4 -ம் தேதி
 

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அற்புதமான சுற்றுப்பயணம் முடிவடைந்திருக்கிறது. ஒருநாள் தொடரையும் ஆஸ்திரேலியாவும், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை இந்தியாவும் வென்றன.

இதை அடுத்து இந்த வருடம் முழுக்க இந்திய அணி விளையாட ஏராளமான போட்டிகள் காத்திருக்கின்றன. அடுத்த மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட விருக்கிறது.

இந்தச் சுற்றுப்பயணத்தில் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட விருக்கின்றன. பிப்ரவரி 4 -ம் தேதி தொடங்கும் போட்டிகள் மார்ச் 28 -ம் தேதி வரை நீடிக்கின்றன.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் இந்திய வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அணியில் கேப்டன் விராட் கோலி. துணை கேப்ட ரஹானே. ரோஹித் ஷர்மா, மயங் அகர்வால், சுப்னம் கில், புஜாரா, கே.எல்.ராகுல், ஹிர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், சஹா, ரவிசந்திர அஷ்வின்,குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகம்மது சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பலரும் பெரிதும் எதிர்பார்த்த தமிழகத்தின் நடராஜன் பட்டியலில் இடம்பெற வில்லை. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் நெட் பவுலராகவே நடராஜன் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், வீரர்களின் காயத்தால் அவருக்கு ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைத்தது.

டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசர வைத்தார். ஆனாலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நடராஜனுக்கு இடம் கிடைக்க வில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த அஷ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவர் டீமில் இருப்பதால் மூன்றாவது தமிழக வீரருக்கான வாய்ப்பு அளிக்க யோசித்திருக்கலாம்.

வாஷிங்டன் சுந்தரா… நடராஜனா என்று பார்த்திருந்தால், சுந்தர் பவுலிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் முக்கிய பங்களிப்பை நிகழ்த்தினார். அதனால், சுந்தர் பெயரை டிக் செய்திருக்கலாம். ஆனாலும், இரண்டு போட்டிகளுக்கான அணி என்றே இது சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் நடராஜன் ஆட வாய்ப்பு அளிக்கப்படலாம்.