×

கார் விபத்தில் பொல்லார்டு மரணம்?

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பொல்லார்டு கார் விபத்தில் இறந்துவிட்டதாகப் பரவிய தகவல் வதந்தி என நிரூபித்துள்ளனர். இணையம் வந்தாலும் வந்தது அனைவரும் பொழுதுபோகாமல் வதந்தியைக் கிளப்பிக் கொண்டே இருக்கின்றனர். இந்த வதந்தி பரப்பும் விஷமிகள் இதுவரை பாடகி ஜானகியை எட்டு முறை சாவடித்திருக்கிறார்கள். பதற வேண்டாம்… அவ்வளவு முறை அவர் இறந்ததாக வதந்திகளைக் கிளப்பிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். சளைக்காமல் ஒவ்வொரு முறையும் ஜானகி நான் உயிரோடு தான் இருக்கிறேன் என ரசிகர்களுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். சினிமா
 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பொல்லார்டு கார் விபத்தில் இறந்துவிட்டதாகப் பரவிய தகவல் வதந்தி என நிரூபித்துள்ளனர்.

இணையம் வந்தாலும் வந்தது அனைவரும் பொழுதுபோகாமல் வதந்தியைக் கிளப்பிக் கொண்டே இருக்கின்றனர். இந்த வதந்தி பரப்பும் விஷமிகள் இதுவரை பாடகி ஜானகியை எட்டு முறை சாவடித்திருக்கிறார்கள். பதற வேண்டாம்… அவ்வளவு முறை அவர் இறந்ததாக வதந்திகளைக் கிளப்பிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். சளைக்காமல் ஒவ்வொரு முறையும் ஜானகி நான் உயிரோடு தான் இருக்கிறேன் என ரசிகர்களுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார்.

சினிமா மட்டுமல்லாமல் அனைத்து பீல்டிலும் வதந்திகளுக்குப் பஞ்சமிருக்காது. அப்படி தான் மும்பையின் காட்டடி கந்தசாமி, அசகாய சூரன் என ரசிகர்கள் வருணிக்கப்படும் பொல்லார்டு கார் விபத்தில் இறந்துவிட்டதாக வதந்திகளைப் பரப்பினர். அதற்கு ஆதாரமாக கார் விபத்தான வீடியோ ஒன்றையும் கொடுத்துவிட்டார்கள். உடனே நம்மாட்கள் உண்மை என நம்பி வாட்ஸ்அப் டேட்டஸில் சோக ரயில் விட ஆரம்பித்து விட்டார்கள். அதன்பின் தான் அதிகாரப்பூர்வ கிரிக்கெட் செய்தி நிறுவனங்கள் பொல்லார்டு இறக்கவும் இல்லை… கார் விபத்தும் ஆகவில்லை என வயிற்றில் பால் வார்த்தார்கள்.

சரி நம்ம பொல்லார்டு என்ன பண்றாருனு அவரோட ட்விட்டர் பக்கம் எட்டிப்பார்த்தா… அங்க தான் நமக்கு ரியல் ஷாக்… ஆமங்க தன்னோட மனைவி போட்டோவ சைட் அடிக்கிற மாறி ட்வீட் போட்டு வச்சிருக்காரு. அத பாத்ததும் இங்க என்ன நடந்திட்டிருக்கு ஒருத்தன் எதுவுமே தெரியாத மாதிரி மிக்சர் சாப்டுட்டு இருக்கானு கவுண்டமணி வாய்ஸ் ஒலித்தது. இதுக்கா இவ்ளோ அக்கப்போர் கூட்டுனிங்க?