×

தோனி ஓய்வுக்குப் பின் நாளை இந்தியா ஆடும் முதல் போட்டி! இந்தியா vs ஆஸ்திரேலியா

ஐபிஎல் போட்டியில் தோனி ரசிகர்கள்… கோலி ரசிகர்கள்.. ரோஹித் ரசிகர்கள் எனப் பிரிந்து கிடந்தவர்கள் எல்லாம் இந்தியா – ஆஸ்திரேலியா தொடரின் போட்டிகளைக் காண தயாராகி விட்டார்கள். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய போட்டிகளில் ஆடவிருக்கிறது. நவம்பர் 27, 29 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், டிசம்பர் 4, 6 மற்றும் 8 -ம் தேதிகளில் டி20 போட்டிகளும் நடக்க விருக்கின்றன. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர்
 

ஐபிஎல் போட்டியில் தோனி ரசிகர்கள்… கோலி ரசிகர்கள்.. ரோஹித் ரசிகர்கள் எனப் பிரிந்து கிடந்தவர்கள் எல்லாம் இந்தியா – ஆஸ்திரேலியா தொடரின் போட்டிகளைக் காண தயாராகி விட்டார்கள்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய போட்டிகளில் ஆடவிருக்கிறது.

நவம்பர் 27, 29 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், டிசம்பர் 4, 6 மற்றும் 8 -ம் தேதிகளில் டி20 போட்டிகளும் நடக்க விருக்கின்றன. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17-ம் தேதியும், இரண்டாம் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதியும், மூன்றாம் டெஸ்ட் போட்டி ஜனவரி 7-ம் தேதியும், நான்காம் டெஸ்ட் போட்டி ஜனவரி 15-ம் தேதியும் தொடங்குகிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகளைக் காண ஆவலோடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆம், இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 50 -75 சதவிகிதம் எனும் சில கட்டுப்பாடுகளும் உண்டு.

பயணத்திட்டத்தின் படி நாளை இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடக்கவிருக்கிறது. தோனி ஓய்வுக்குப் பிறகு இந்திய அணி ஆடும் முதல் போட்டி இது.

ஏற்கெனவே, தோனியைத் தேர்வு செய்யாமல் இந்திய அணி போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. அப்போதெல்லாம் தோனி ரசிகர்கள் அடுத்த போட்டியில் தோனி ஆடுவார் என நம்பிக்கையோடு இருந்தார்கள். இம்முறை தோனியை ப்ளூ ஜெர்ஸியில் காண முடியாத ஏக்கம் இருக்கவே செய்யும்.

நாளைய ஒருநாள் போட்டியில் விராட் கோலி கேப்டன். மேலும் ஸ்ரேயாஸ், ஷிகர் தவான், மயங் அகர்வால், மணிஷ் பாண்டே, கில், பாண்டியா, ஜடேஜா, கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன் எனப் பேட்டிங்கிலும், குல்திப் யாதவ், முகம்மது ஷமி, சைனி, தக்கூர், சஹல், பும்ரா என பவுலிங்கிலும் காத்திருக்கிறார்கள்.

இவர்களில் எவரெல்லாம் ஆடும் 11 அணியில் இடம்பிடிப்பார்கள்… ஒப்பனிங் இறங்கப்போவது யார் யார்… பவுலிங்கில் யார் இருப்பார் என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. நாளை இதற்கான விடை தெரிந்துவிடும். யார் இருந்தாலும் இந்திய அணி வலுவாக இருக்கிறது என்பதே உண்மை.