×

டெஸ்ட் உலகக்கோப்பை பைனல் எங்கே? எப்போது? – கங்குலி அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்றழைக்கப்படும் டெஸ்ட் போட்டிக்கான உலகக்கோப்பை நியூஸிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி முதலில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது அது இங்கிலாந்திலுள்ள சௌதாம்டனில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். சௌதாம்டன் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சமீப ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வம் குறைந்துகொண்டே போவதால், டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த ஐசிசி அறிவிப்பு வெளியிட்டது.
 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்றழைக்கப்படும் டெஸ்ட் போட்டிக்கான உலகக்கோப்பை நியூஸிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி முதலில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது அது இங்கிலாந்திலுள்ள சௌதாம்டனில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். சௌதாம்டன் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

சமீப ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வம் குறைந்துகொண்டே போவதால், டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த ஐசிசி அறிவிப்பு வெளியிட்டது. ஒன்பது அணிகள் இத்தொடரில் பங்கேற்றுள்ளன. இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் ஆறு தொடர்களில் (சொந்த மண்ணில் 3, அயல்நாட்டில் 3) விளையாட வேண்டும். ஒவ்வொரு தொடரிலும் 2 முதல் 5 போட்டிகளை நடத்தலாம். ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் ஒதுக்கப்படும். போட்டிகளின் எண்ணிக்கை மற்றும் முடிவுகளின் படி புள்ளிகள் பிரித்தளிக்கப்படும்.

இந்தத் தொடர் 2019ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதல் வருடத்திலிருந்தே இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்துவந்தது. இச்சூழலில் கொரொனா தாக்கத்தால் போட்டிகள் நடத்தமுடியாமல் போனது. இதையடுத்து ஐசிசி உயர்மட்ட குழு கூடி புதிய விதிமுறைகளை வகுத்தது. அதன்படி, 85 சதவிகித போட்டிகளை மட்டுமே நடத்த முடியும் என்பதால், கொரோனாவால் நடத்தமுடியாமல் போன தொடர்களுக்கு டிராவுக்கான புள்ளிகள் வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இதனால் இந்தியா இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு நெருக்கடி உண்டானது.

பாகிஸ்தானுக்கு எதிராக நியூஸிலாந்து 2-0 என்ற கணக்கில் வெல்ல மூன்றாம் இடத்திற்குச் சென்றது இந்தியா. இச்சூழலில் பார்டர்-கவாஸ்கர் டிராபி இந்தியாவுக்கு முக்கியவத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அந்தத் தொடரில் நிறைய வரலாற்றுச் சம்பவங்களைச் செய்து தன்னுடைய இருப்பை இந்தியா நிலைநிறுத்திக் கொண்டது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தம் மாறியது. இருப்பினும், இறுதிப் போட்டிக்குள் நுழைய இங்கிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதிலும் 3-1 என்ற கணக்கில் வெற்றிவாகை சூடி பைனலுக்குள் அட்டகாசமாக நுழைந்தது. நீண்ட நாள்களாவே நியூஸிலாந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.