×

ICC ஒருநாள் ரேங்கிங்-ல் முதல் 10 இடத்தில் இந்திய வீரர்கள் எத்தனை பேர் தெரியுமா?

கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவரின் கனவும் ICC தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்து விட வேண்டும் என்பதுதான். எப்போதுமே இந்திய வீரர்கள் முதல் பத்து இடங்களில் குறைந்தது இரண்டு பேராவது இடம்பெற்றுவிடுவார்கள். அது டெண்டுல்கர், டிராவிட், கங்குலி என மும்மூர்த்திகள் இருந்த காலம் தொட்டே இதில் மாற்றம் இல்லை. இப்போது ICC ஒருநாள் தரவரிசைப் பட்டியலை அப்டேட் செய்துள்ளது. அதில் யார் எந்தெந்த இடங்களில் இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி
 

கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவரின் கனவும் ICC தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்து விட வேண்டும் என்பதுதான். எப்போதுமே இந்திய வீரர்கள் முதல் பத்து இடங்களில் குறைந்தது இரண்டு பேராவது இடம்பெற்றுவிடுவார்கள். அது டெண்டுல்கர், டிராவிட், கங்குலி என மும்மூர்த்திகள் இருந்த காலம் தொட்டே இதில் மாற்றம் இல்லை.

இப்போது ICC ஒருநாள் தரவரிசைப் பட்டியலை அப்டேட் செய்துள்ளது. அதில் யார் எந்தெந்த இடங்களில் இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். 2-ம் இடத்தில் இருப்பதும் இந்திய வீரர்தான். அது ரோஹித் ஷர்மா. இந்த இருவரையும் தவிர முதல் பத்து இடங்களில் இந்திய வீரர்கள் இடம்பிடிக்க வில்லை.

3-ம் டத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அஸாம், 4-ம் இடத்தில் நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர், 5-ம் இடத்தில் ஆஸ்திரேலியவின் ஆரோன் பின்ச் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

6-ம் இடத்தில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரான்சிஸ் ப்ளெஸிஸ், 7-ம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், 8-ம் இடத்தில் நியூசிலாந்தின் வில்லியம்சன், 9-ம் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் டி காக், 10 –ம் இடத்தில் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்ட்டோவும் இடம்பிடித்துள்ளனர்.

16-ம் இடத்திலிந்தியாவின் ஷிவர் தவான், 34-ம் இடத்தில் கே.எல். ராகுல், 49 –ம் இடத்தில் ஹிர்திக் பாண்டியாவும் இடம்பெற்றுள்ளார்.

சமீபத்தில் ICC ஒரு டீம் பட்டியலை வெளியிட்டது. அதில் பாகிஸ்தான் வீரர் யாருமில்லை. ஆனால், தர வரிசைப் பட்டியலில் பாபர் அஸாம் இடம்பிடித்திருக்கிறார். இவர் பெயர்கூட இல்லை என்றுதான் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயித் அக்தர் கடும் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.